Monsoon: சூடு பிடிக்கும் மழைக்காலம்.. நோய்களைத் தவிர்ப்பது எப்படி.. மாணவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

Oct 30, 2024,10:04 AM IST

சிவகங்கை: தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வருவதால் மழைக்காலங்களில் நோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது தொடர்பாக தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான நலவாழ்வு திட்டம் மருத்துவ முகாம் நடைபெற்றது.


தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் தேங்கிய மழைநீரால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது. இந்த நிலையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசக நடுநிலைப் பள்ளியில் மழைக்காலங்களில் நாம் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து நல்வாழ்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. 




இதில் கண்ணங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கணபதி சீதாராமன் மற்றும் யாழினி ஆகியோர் கலந்து கொண்டனர் . இவர்களுடன் செவிலியர் உமா மகேஸ்வரி மருந்தாளுனர்கள் சிவக்குமார் கனிமொழி ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த முகாமிற்கு வந்திருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். 


அப்போது மழைக்காலத்தில் நோய்கள் தாக்காமல் பாதுகாப்பது பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது தொடர்பாக மருத்துவகள் பேசியதாவது: 


- மழைக்காலங்களில் சூடாக தண்ணீர் குடிக்க வேண்டும் .சூடானவற்றையே சாப்பிட வேண்டும். 


- இரவு நேரங்களில் கொசு கடிக்காமல் இருக்க  படுக்கும் பொழுது தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ள வேண்டும் . நம் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.




- வீடுகளில்  ரெப்ரிஜிரேட்டர் பின்புறம் தண்ணீர் இருந்தால் அதனை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளை சேர்க்கக்கூடாது.


- கடலை மிட்டாய், கடலை உருண்டை, பேரிச்சம்பழம் போன்று இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை  அதிகமாக சாப்பிட வேண்டும்.


- காய்கறி சூப் முடிந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.விலை குறைவாக இலவசமாக கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையில் சூப் குடிக்க வேண்டும்.


- தொண்டை வலி வந்தால் வென்னீரில் கல் உப்பு கலந்து அவ்வப்போது கொப்பளித்து துப்ப வேண்டும்.




இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் நாமாக மாத்திரை சாப்பிடாமல்   மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.


- அவ்வப்போது தொடர்ந்து வெந்நீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும். வெந்நீர் குடித்தால் பொதுவாக தொண்டை வலி உட்பட பல்வேறு வியாதிகள் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளது என பேசினார்.




இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் மாணவர்களின் உடலை பரிசோதித்து, உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்துக் கூறினார்கள். மேலும் சில நோய்களுக்கு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இது தவிர மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்து சொல்லப்பட்டது.


பொதுவாக பல் சம்பந்தமான நோய்கள், விட்டமின் குறைபாடு தொடர்பான நோய்கள், தைராய்டு தொடர்பான தகவல்கள், ஆகியவற்றை எவ்வாறு சிறு வயது முதலே சரி செய்வது, நோய் வருமுன் காப்பது எப்படி போன்ற பல்வேறு உடல் நோய்கள் தொடர்பான தகவல்களை மருத்துவர்கள் வழங்கினர். இந்த முகாமில் நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வீரராக பிறந்து வீரராக மறைந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

news

கங்குவா பட எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மரணம்.. வீட்டில் மர்மமான முறையில் உயிரிழப்பு!

news

இட்லி-கறிக்குழம்பு .. தலை தீபாவளி கொண்டாடும் புது மாப்பிள்ளைக்கான ஸ்பெஷல் காம்போ!

news

தீபாவளி 2024 : பாரம்பரிய முறையில் எண்ணெய் வைத்து குளிக்க இதுதான் நல்ல நேரம்!

news

Monsoon: சூடு பிடிக்கும் மழைக்காலம்.. நோய்களைத் தவிர்ப்பது எப்படி.. மாணவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

news

அக்டோபர் 30 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

கடக ராசிக்காரர்களே.. வெற்றி வாசல் தேடி வரும்.. தனுசு ராசியா.. உஷாரய்யா உஷாரு!

news

நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்