- ஸ்வர்ணலட்சுமி
உப்புமாவைப் பிடிக்காதவர்கள்தான் அதிகம்.. ஆனாலும் அதன் பெயரைக் கேட்டாலே உருகி உருகி மெய் மறந்து போபவர்களும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விரும்பும் சூப்பரான சம்பா ரவை உப்புமா பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.. ஓடியாங்க கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்
சம்பா ரவை ஒரு கப்
பெரிய வெங்காயம் ஒன்று கட் செய்யவும்
பச்சை மிளகாய் இரண்டு கட் செய்யவும்
கருவேப்பிலை கொத்துமல்லி ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி ஒரு துண்டு தட்டிக் கொள்ளவும்
பூண்டு 4 தட்டிக் கொள்ளவும்
மா இஞ்சி சிறிய அளவு தட்டிக் கொள்ளவும்
கேரட் ,பீன்ஸ், உருளைக்கிழங்கு ,பச்சை பட்டாணி ஒரு கப் வேகவைத்து கொள்ளவும்
பட்டை ,லவங்கம் -தலா மூன்று
சிறிய தக்காளி ஒன்று கட் செய்யவும்
கடலை எண்ணெய் 3 ஸ்பூன்
தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு
உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஒரு அகன்ற கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பட்டை, இலவங்கம் பூ சேர்க்கவும்.
தட்டிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ,பெரிய வெங்காயம் ,தக்காளி ஒவ்வொன்றாக சேர்க்கவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும்
உப்பு உப்பு போட்டு தண்ணீர் நன்றாக கொதி வர வேண்டும். பிறகு சம்பா ரவை சேர்க்கவும் .வேகவைத்த காய்கறிகளை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம் .
இப்பொழுது சூப்பரான, சத்தான கமகமன்னு சம்பா கோதுமை ரவை உப்புமா காய்கறிகளுடன் ரெடி. வேலைக்குச் செல்பவர்கள், குழந்தைகள் ,பெரியவர்கள் ,மற்றும் டயாபடீஸ் இருப்பவர்களுக்கு இது நல்ல பில்லிங்கான உணவு.
2026 சட்டமன்றத் தேர்தலில்..விஜய் தனித்து போட்டியிட முடிவு..தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்
அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பில் கடும் வாக்குவாதம்... நடந்தது என்ன?
சீமான் பேட்டிக்கு பதில் அளித்து..சரமாரியாக கேள்வி கேட்டு.. மீண்டும் வீடியோ வெளியிட்ட நடிகை!
குட் பேட் அக்லி பட டீசர்... 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!
Summer rain.. மேலிருந்து வீழம் ஈரத் துளிகள் பட்டு.. மயங்கும் நிமிடங்களில்!
தமிழ்நாட்டில் இன்று.. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. கோடை பருவமழை கணக்கீடு தொடக்கம்..!
சம்பா ரவை உப்புமா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீ்ம் ஜாய்.. செஞ்சு பாருங்க.. சொக்கிப் போவீங்க!
தெலுங்கானா சுரங்க விபத்தில்.. 2 இன்ஜினியர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!
இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.. மக்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி
{{comments.comment}}