ஹோட்டல் சாம்பார் மாதிரி டேஸ்ட் வருமா.. அட அதை வீட்டிலேயே செய்யலாமே.. சூப்பரா..!

Jun 30, 2024,01:31 PM IST

சென்னை: ஹலோ தோழிகளே, வீட்டில் உள்ள பெண்களுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் என்ன சமைக்கிறதுன்னு யோசிச்சே டென்ஷன் ஏறிடும்.. அதேசமயம், நாம என்னதான் பார்த்துப் பார்த்து செய்தாலும், வீட்டில் உள்ள ஆண்களுக்கு, அட ஹோட்டல்ல சாப்பிட்டது மாதிரி வருமா அப்படின்னு ஒரு அலுப்பு அலுத்துக்குவாங்க.. அதெல்லாம் ஒரு டிசைன்.. ஒன்னும் பண்ண முடியாதுங்க. வெரைட்டியாவும் கொடுக்கணும், டேஸ்டியாவும் இருக்கணும்னு நாம ரொம்பவே மெனக்கிட்டுதான் செய்றோம்.. ஆனாலும் என்னதான் வீட்ல சூப்பரா சமைச்சாலும் ஹோட்டலில் உள்ள டேஸ்ட் வராதுன்னு நினைக்கத்தான் செய்றாங்க.


நாமளும் அதே பொருட்கள் தான் யூஸ் பண்றோம். ஆனா அங்க மட்டும் எப்படி இவ்வளவு டேஸ்டா இருக்குன்னு தெரியலையேன்னு நம்மில் பலரும் யோசிப்போம்..  ஆனால் அதுல பெரிய ரகசியம் எல்லாம் இல்லைங்க.. நாமளும் வீட்டிலேயே ஹோட்டலில் தருவது போல சுவையான உணவை சமைக்கலாம். அப்படி இன்னைக்கு ஒரு உணவைத்தான் பார்க்கப் போறோம்.  அது வேற ஒன்னும் இல்லைங்க.. கமமக  சாம்பார் தான்.


நிறைய பேருக்கு இட்லி, தோசை, பொங்கல் ஏன் வடைக்கு கூட சாம்பார் இல்லைன்னா சாப்பிடவே பிடிக்காது. ஹோட்டல் சாம்பாருக்காகவே இட்லி வாங்கி அதுல சாம்பார் ஊத்தி பாத்திகட்டி சாப்பிடற ஆளுங்க எல்லாம் நிறைய இருக்காங்க. அப்படிப்பட்ட டேஸ்டியான சாம்பாரை வீட்ல எப்படி செய்வது என்று பார்ப்போங்க!


ஹோட்டல் சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள்:




தனியா -  மூணு டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் - எட்டு முதல் பத்து

கடலைப்பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

துவரம்பருப்பு - ஒரு கப் (வேக வைத்தது)

எண்ணெய்  - 3 டேபிள் ஸ்பூன்

வெந்தயம்  - 3/4 டீஸ்பூன்

கடுகு உளுந்து - ஒரு ஸ்பூன்,

சின்ன வெங்காயம் - 10 முதல் 15

தக்காளி - 2

மஞ்சள் தூள் - சிறிதளவு

புளி -  சிறிதளவு (எலுமிச்சை அளவு)

துருவிய தேங்காய் - நாலு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

முருங்கைக்காய் - 1 

பரங்கிக்காய் - ஒரு கப் (நறுக்கியது)

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை


செய்முறை: முதலில் துவரம் பருப்பை கழுவி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம் வரமிளகாய் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். பிறகு ஆறியபின் வறுத்த பொருட்களுடன் தேங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் ஊற்றி  கடுகு உளுந்து, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதங்கிய பின் நறுக்கிய காய்கறிகளை போட்டு வேக விடவும். காய்கறிகள் முக்கால் பாதம் வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்து, அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.


நன்கு கொதித்தபின் வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் கொதிக்க வைத்து சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் ரெடி ஆகிவிடும். 


இது இட்லி, தோசை, பொங்கல், சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் அவ்வளவுதாங்க! கமகமன்னு வாசத்தோடு இருக்கிற சாம்பாரை நீங்களும் உங்க வீட்ல செஞ்சு ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட் பண்ணிட்டு எனக்கு தேங்ஸ் சொல்ல மறக்காதீங்க!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்