ரேக்ளா ரேஸ் தெரியும்.. பட் இந்த "தோக்ளா".. பார்த்திருக்கீங்களா?.. செம மாஸ்!

Aug 25, 2023,01:33 PM IST

- மீனா


ஒரே ஒரு ஃபிரண்ட்டை வச்சுட்டு நான் படுற பாடு இருக்கே.. அயயயயயயய்யய்யோ.. அப்படின்னு நம்ம சந்தானம் "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்துல அலுத்துக்குவார்ல.. அதே மாதிரி இந்த ஒரே ஒரு இன்ஸ்டன்ட் மிக்ஸை வச்சுட்டு எத்தனை வெரைட்டியான ஃபுட்தான் சொல்வீங்கன்னு.. நீங்க அலுத்துக்க வேண்டாம் பாஸ்.. காரணம், அடுத்து ஒரு சூப்பரான சாப்பாட்டைப் பத்தித்தான் நாம பேசப் போறோம்.. வாங்க, நேரா கிச்சனுக்குள்ள போய்ரலாம்!


நாம இப்ப என்ன பண்றோம்னா.. ஒரு இன்ஸ்டன்ட் மிக்ஸ் வைத்து இத்தனை வகையான சமையல் கூட செய்யலாமா அப்படின்னு பார்த்துட்டு வர்றோம்.. நிறையப் பேருக்கு இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸ் சீரிஸ் ரொம்பவே பிடிச்சுப் போயிருச்சு போல.. இப்படியெல்லாம் பண்ணலாமா என்று ஆச்சரியமாக கேட்கிறார்கள்.


இந்த மிக்ஸை வைத்து இதுவரை இட்லி, அடை தோசை, மற்றும் மசால் வடை போன்றவற்றை எப்படி செய்வது என்று  பார்த்தோம்  இன்று அதே இன்ஸ்டன்ட் மிக்ஸ் வைத்து நான்காவது ஐட்டம் ஒன்றைப் பார்க்கப் போறம்.. அதுதாங்க குஜராத்தில் பிரபலமான "தோக்ளா".. பட் இதுக்காக உங்களை நாங்க குஜராத்துக்குக் கூட்டிட்டுப் போகப் போறதுல்ல.. அதுக்குப் பதிலா. .அந்த ரெசிப்பியை உங்க கைல கொடுத்து இங்கேயே செஞ்சு சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்கன்னுதான் சொல்லப் போறோம்..!


அதை விடுங்க பாஸ்.. எங்களுக்கு "ரேக்ளா ரேஸ்"  தெரியும்.. அது என்ன தோக்ளா.. அதை வெளக்குங்க முதல்ல.. (இருங்க இருங்க.. அதுக்கு முன்னாடி வெளக்குன பாத்திரத்தை எடுத்து மேல வச்சுட்டு வர்றேன்)


ஆ... என்ன கேட்டீங்க.. தோக்ளான்னா என்னன்னுதானே.. சொல்றேன்.. நாம எப்படி இட்லியை நம்முடைய ஹெல்த்தியான உணவு லிஸ்டில் வைத்திருக்கிறோமோ, அதே மாதிரி தான்  குஜராத் மாநிலத��திலும் இந்த தோக்ளாவை காலை உணவாகவும் அல்லது ஹெல்த்தி ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடுகிறார்கள். ஏனென்றால்  இட்லியை எப்படி ஆவியில் வேகவைத்து சமைப்போமோ அதே மாதிரி தான் இந்த தோக்ளாவையும் ஆவியி��் வேக வைத்து சமைப்பார்கள். 


இட்லியைப் போலவே, தோக்ளாவுக்கும்  எண்ணெய் அதிக அளவு  தேவைப்படாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நாம்  சாப்பிடும் இட்லியை போலவே இந்த தோக்ளாவும் ஒரு ஹெல்த்தியான உணவு தானே. அப்புறம் எதுக்கு இன்னமும் வெயிட் பண்ணனும்.. வாங்க எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்..


தோக்ளாவை, குஜராத்தியர்கள், கடலை மாவு , அரிசி மாவு இவற்றை மட்டும் பயன்படுத்தி செய்வார்கள். ஆனால் நாமதான் ஏற்கனவே, 


கடலை பருப்பு

துவரம் பருப்பு

பாசிப்பருப்பு

உளுந்தம் பருப்பு

அரிசி மேலும் இவற்றோடு சில பொருட்களையும் சேர்த்து இன்ஸ்டன்ட் மிக்ஸ் ரெடி பண்ணி வைத்திருக்கிறோம் அல்லவா, அதை வைத்து செய்யலாம நாம செய்யலாம்.  அதிகப்படியான பருப்புகள் சேர்ப்பதனால் நமக்கு புரோட்டின் ரிச் ஸ்னாக்ஸ் ஆகவும் இருக்கும்.


தோக்ளா செய்வதற்கு தேவையான பொருட்கள்:


இன்ஸ்டன்ட் மிக்ஸ்-1 கப்

மஞ்சள் தூள்-1 பின்ச்

உப்பு-சிறிதளவு

தயிர்-1/2 கப்

சோடா உப்பு: 1/4 டீஸ்பூன்

சர்க்கரை -1 டீஸ்பூன்

தாளிப்புக்கு தேவையானவை:

எண்ணெய்-2 டீஸ்பூன் 

கடுகு- 1 டீஸ்பூன்

வெள்ளை எள்-1/4 டீஸ்பூன்

கருவேப்பிலை-சிறிது

சர்க்கரை -1/4 டீஸ்பூன்

உப்பு-1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு-1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய்- 2(சிறு சிறு துண்டுகள்).


ரைட்.. இப்ப, முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தோக்ளா செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களான இன்ஸ்டன்ட் மிக்ஸ் , உப்பு, மஞ்சள் தூள், தயிர், சர்க்கரை இவற்றையெல்லாம் ஒன்றாக கலந்து, கடைசியில் சோடா உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி  3/4  மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும்.  ஊறிய பிறகு மிகவும் கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து  இலகுவாக மாவை கரைத்துக் கொள்ளவும். 


எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாவை ஊற்ற வேண்டும் . அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கீழே ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் இந்த கலவை வைத்து மூடி போட்டு 15 நிமிடங்கள் ஆவியில் வேக விட வேண்டும். வெந்த பிறகு அதை அப்படியே ஒரு தட்டில் மாற்றி நமக்கு தேவையான அளவில் பீஸ்களாக கட் பண்ண வேண்டும்.பிறகு தாளிக்க கொடுத்துள்ளவற்றை எல்லாவற்றையும் தாளித்து அதனுடன் சிறிது தண்ணீரும் கலந்து அதை இந்த பீஸ் மேல் ஊற்றினால் நமக்கு ஜூஸியான தோக்ளா இப்போது ரெடி. 




இதில் இனிப்பு ,புளிப்பு, காரம் இருப்பதினால் இதன் சுவை அல்டிமேட் ஆக இருக்கும். தேவைப்பட்டால் சட்னி வச்சு தொட்டு சாப்பிட்டுக்கலாம்.. அதுவும் சூப்பராதான் இருக்கும்.. பட் அதுவும் இன்ஸ்டன்ட்டா இருந்தா இன்னும் சூப்பர் தான். ஆனால் அதை  அடுத்த கட்டுரையில் சொல்றேன். இப்ப கிளம்புறேன் பை பை!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்