Super Snacks... மசால் வடை.. மசால் வடைதாய்யா!

Aug 23, 2023,03:55 PM IST
- மீனா

இப்ப பார்த்தீங்கன்னா மக்களே.. நாம ஒரு சமையல் சீரிஸில் மும்முரமா இறங்கிட்டோம்.. ஒரே ஒரு இன்ஸ்டன்ட் மிக்ஸை வைத்து என்னெல்லாம் பண்ணலாம்.. எப்படியெல்லாம் சமையலை ஈஸியாக்கலாம்.. இதுதாங்க நம்ம சீரிஸோட முக்கிய நோக்கமே.. அந்த வரிசையில இப்ப என்ன பார்க்கப் போறோம் தெரியுமா..

எஸ்.. யூ ஆர் கரெக்ட்.. "மசால் வடை"யேதான்!



வடை என்றால் யாருக்கு தான் பிடிக்காது.. அதுவும் மசால் வடை என்றால் மனம் வேண்டாம் என்றா சொல்லும்..
வடை என்ற வார்த்தையைப் படிச்சாலே போதும்.. வாயெல்லாம் ஜொள்ளு வர ஆரம்பிக்கும் பலருக்கும்.. அதிலும் சாயங்காலம் ஆயிருச்சுன்னா.. "வடையைத் தேடும் வாயர்"களாக எல்லோரும் மாறி விடுவோம்..  சூரியன் சாயும் நேரத்தில் ரோட்டோர கடைகளில் வடைகள் குவியல் குவியலாக மக்களை வரவேற்க ஆரம்பித்து விடும். எத்தனை கடைகள் வந்தாலும் எல்லா கடைகளிலும் கூட்டமாக தான் இருக்கிறது . ஏனென்றால் அந்த அளவிற்கு நாம் எல்லாருக்கும் வடை என்றால் ஒரு அடிக்ட் ஆகி விட்டதுதான்.

குறிப்பாக மழைக்காலங்களில், மழை பெய்யும் போது கையில் சூடாக ஒரு வடையோ, அல்லது பஜ்ஜியோ அல்லது போண்டாவோ இருந்தால்.. ஆஹாஹாஹாஹா... என்னா சுகம்ய்யா ... இந்த மாதிரி ஸ்னாக்ஸ் சாப்பிடுவது என்றால், நாம் எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று தான். ஆனால் மழை நேரத்தில் வெளியில் போய் வாங்குவது என்பது சிரமம் தான். அந்த நேரத்தில் திடீரென்று வடை செய்வதற்கு என்ன பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்,இந்த இன்ஸ்டன்ட்  மிக்ஸை முன்னரே நாம் ரெடி பண்ணி வைத்துக் கொண்டால், நாம் நினைத்த நேரத்தில் சட்டென மசால் வடையை  ரெடி பண்ணி விடலாம். 

கடையில் போய் வடையை வாங்கிச் சாப்பிடுவதை விட வீட்டிலேயே செய்து சாப்பிடும்போது சுவையும் நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் தூக்கலாக இருக்கும்.. கூட 2 வடையை எக்ஸ்ட்ராவாக உள்ளே தள்ளினாலும் வயிறு வலிக்காது..  வீட்டிலேயே செய்யும்போது சுகாதார முறையில் செய்வதால் நமக்கு மட்டுமல்ல, நம் பிள்ளைகளுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. நம் பிள்ளைகளுக்கு நல்லதை மட்டும் கொடுக்க நினைக்கும் நமக்கும் ஒரு ஆத்ம திருப்தி இப்படி நாமே செய்து கொடுக்கும்போது. 


முதல் கட்டுரையில் இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொடியை நாம் ரெடி பண்ணுவதற்கு

துவரம் பருப்பு 
கடலைப்பருப்பு
பாசி பருப்பு
உளுந்தம் பருப்பு இவற்றோடு சில பொருட்களையும் சேர்த்து ரெடி பண்ணுவது எப்படி என்று பார்த்திருப்போம். இப்போ இந்த மிக்ஸை வைத்து மசால் வடை எப்படி செய்வது என்று பார்க்க போறோம்.

தேவையான பொருட்கள்:

இன்ஸ்டன்ட் மிக்ஸ்-1 1/2 கப்
கடலைப்பருப்பு-3  ஸ்பூன்
ச�����ம்பு - 1  ஸ்பூன்
இஞ்சி-சிறு துண்டு
கருவேப்பிலை- சிறிதளவு
உப்பு -தேவைக்கேற்ப
நல்லெண்ணெய்- தேவைக்கு ஏற்ப

முதலில் இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொடியை அதன் அளவில் பாதி அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கடலைப்பருப்பையும் தனியாக தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இவை இரண்டும்  ஊறிய பின்பு  இதனுடன் சேர்ந்து கருவேப்பிலை உப்பு இவற்றையெல்லாம் கலந்து நமக்கு தேவையான அளவில் வடைகளாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அது சூடானவுடன் வடைகளை  எண்ணையில் போட்டு சிம்மில் வைத்து வேக வைத்து எடுத்தால் மசால் வடை ரெடி.  இன்ஸ்டன்ட் மிக்ஸோடு கடலைப்பருப்பு சேர்த்து இருப்பதனால் வெளியில் மொறுமொறு வென்றும் , அதே நேரத்தில் உள்ளே மெதுவாகவும் இருக்கும் இந்த மசால் வடை . 

இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸ்  வைத்து மசால் வடை மட்டும் தான் செய்ய முடியும் என்று இல்லை, வேற  ஸ்னாக்ஸும் இந்த மிக்ஸில் செய்யலாம். அது  என்னவென்று அடுத்த கட்டுரையில் சொல்கிறேன். இப்ப  டைம் ஆயிருச்சு.. வடை சுட்டு சாப்பிடணும்.. வர்ட்டா!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்