குக்கரை எடுங்க.. டக்குன்னு பண்ண ஈஸியான ரெசிப்பி.. கருப்பு கவுனி அரிசி கஞ்சி சாதம்!

Mar 20, 2025,03:17 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


அவசரமாக வேலைக்குச் செல்பவர்கள் பேச்சிலர்ஸ் தனி குடித்தனம் இருப்பவர்கள் ஈசியாக சட்டென செய்ய ஒரு குக்கரில் சாதம் ,ஒரு கடாயில் துவையல் செய்து நல்ல ஹெல்த்தியான சுவையான அருமையான உணவு சாப்பிடலாம். என்ன சாதம் என்று கேட்கிறீர்களா அதுதான் கருப்பு கவுனி அரிசி சாதம். கருப்பு கவுனி அரிசி கஞ்சி சாதம், காலையில் சாப்பிட நல்ல ஃ பில்லிங் ஆன உணவு. வாங்க ஃபிரண்ட்ஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.


கருப்பு கவுனி அரிசி கஞ்சி சாதம் + பருப்பு துவையல்




தேவையான பொருட்கள்


கருப்பு கவுனி அரிசி ஒரு கப்

பருப்பு துவையல் செய்ய தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஒரு கப்

வர மிளகாய் 3 காரம் தேவைக்கு ஏற்ப

சீரகம் ஒரு ஸ்பூன்

கருவேப்பிலை மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு

புளி சிறிதளவு

தேங்காய் துருவல் 4 ஸ்பூன்

உப்பு தேவைக்கு ஏற்ப


செய்முறை:


1. கருப்பு கவுனி அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் வடிகட்டிய பிறகு மிக்ஸியில் நன்றாக பொடி செய்யவும்.

2. அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .ஒரு குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி தண்ணீரில் ஊறிக் கொண்டிருக்கும் கவுனி அரிசியை அப்படியே தண்ணீரோடு குக்கரில் சேர்க்கவும் . மொத்தம் மூன்று கப் தண்ணீர் குறிப்பு :எந்த கப்பில் அரிசி அளந்தோமோ அதே கப்பில் தண்ணீர் அளக்கவும் .        

3. மூன்று அல்லது நான்கு விசில் விடவும்.

4. குக்கர் பிரஷர் அடங்கியதும் குக்கர் மூடி திறந்து கருப்பு கவுனி அரிசி சாதத்தில் உப்பு போட்டு கிளறவும்.

* பருப்பு துவையல் அரைக்க ஒரு கடாயில் துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் ,புளி சேர்த்து டிரையாக வறுக்கவும். பருப்பு பொன் நிறமாக மாறியதும் வரமிளகாய், சீரகம் உப்பு தேவைக்கு  சேர்த்து வறுக்கவும்.

* அடுப்பை அணைத்துவிட்டு அதே சூட்டில் தேங்காய் துருவல் சேர்க்கவும் பிறகு சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் கருவேப்பிலை மல்லி தழை சேர்த்து கொரகொரப்பாக  அரைக்கவும்.


குறிப்பு: பருப்பு துவையல் அரைக்க சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்தால்தான் கெட்டியாக உருண்டை பதம் வரும்.


பயன்கள் என்ன என்று பார்ப்போமா




1. வெள்ளை பழுப்பு அரிசியை விட அதிக சத்துக்கள் கொண்டது கருப்பு கவுனி அரிசி .இதில் ஆழமான கருப்பு                   அல்லது ஊதா நிறம் அதன் உயர் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை குறிக்கிறது.

2. பழங்காலத்தில் இதனை 'தடை செய்யப்பட்ட அரிசி' என்றும் "எம்பரஸ் ரைஸ் "என்றும் அழைப்பார்கள்.

3. இதில் அந்தோ சயனின் என்னும் ஆண்டி ஆக்சிடென்ட் இருப்பதால் இதனை உட்கொண்டால் அதீத நன்மை                 பயக்கும்.

4. மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது.

5. சர்க்கரை நோய் கட்டுப்படுத்துகிறது. 

6.கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை சரி செய்யும். 

7. நரம்புகளுக்கு சிறந்தது அதிக அளவு நார்ச்சத்து நிறைந்தது. 

8. கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்துகிறது. 

9. உடல் எடை குறைய உதவுகிறது. 

10. புற்றுநோய் தடுக்கிறது இது இயற்கை நச்சு நீக்குகிறது. 

11. முடி வளர்ச்சிக்கு தேவையான பிற புரதங்களுடன் பயோடின் ,விட்டமின் பி ஆகியவற்றை வழங்குகிறது.


இத்தனை நன்மை பயக்கும் கருப்பு கவுனி அரிசி கஞ்சி சாதம் செய்து சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக இருக்கும். இது போன்ற அருமையான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்