சத்துக்கள் நிறைந்த இறால் தொக்கு.. சட்டுனு  செய்யலாம்.. எப்படின்னு தெரியுங்களா?

Mar 01, 2024,07:28 PM IST

சென்னை: வணக்கம் தோழிகளே, அனைவரும் நலமா? இன்னிக்கு ஈசி குக்கிங்ல நான் சொல்ல போற ரெசிபி என்னன்னா, இறால் தொக்கு தாங்க. 


கடல்  உணவுகள்னாலே எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். நம்ம பீச், ஹோட்டல்னு எங்க போனாலும் அந்த வாசனையிலேயே நாம போய் சாப்பிடாம வரமாட்டோம். அவ்வளவு சூப்பரா இருக்கும். அது அவ்வளவு ஹெல்த்தியும் கூடங்க.


இறால் சற்று விலை அதிகம்னாலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருக்குங்க. கடல் உணவுகளான மீன், நண்டு போன்றவற்றில் புரோட்டின், ஒமேகா 3 அதிகமாய் இருக்கும்னாலும் இறால்ல ஏகப்பட்ட விஷயம் இருக்குங்க. அது என்னன்னு தெரியுமா பிரண்ட்ஸ்?




- புரோட்டீன் மற்றும் விட்டமின் டி உள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து நம்ம காக்கும்.


- முக்கியமா கம்ப்யூட்டர் முன்னாடி ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை செய்றவங்களுக்கு இது ரொம்ப சிறந்தது.


- இறாலில் கால்சியம் பொட்டாசியம் உள்ளதால் எலும்புகள் வலிமை பெற உதவும்.


- இதில் அயோடின் அதிகமாக உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.


- இறால்ல கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிகமா எடுத்துக் கொள்ளலாம்.


சரிங்க இது நன்மைகளை தெரிஞ்சுகிட்டோம்! இப்ப எப்படி செய்யலாம்னு சொல்றேங்க,


இறால் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:


இறால்- 1/2 கிலோ

சின்ன வெங்காயம்- 20 முதல் 30

தக்காளி -2

இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்( வறுத்து அரைக்க )

மிளகு -11/2 ஸ்பூன்

சீரகம் -1/2 ஸ்பூன்

சோம்பு -1 ஸ்பூன்

தேங்காய் துருவல் -2 ஸ்பூன்

நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்

மல்லித்தூள் -11/2 ஸ்பூன்

கரம் மசாலா தூள்-1 ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு


செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின் ஒரு அடி கனமான பாத்திரத்தில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, தேவையான உப்பு சேர்க்கவும். பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலாத்தூள், அரைத்த மசாலா விழுது ஆகியவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.




நன்கு கொதி வந்ததும் சுத்தம் செய்து வைத்த இறாலை சேர்த்து தொக்கு பதத்திற்கு வந்ததும் இறக்கினால் டேஸ்ட்டான இறால் தொக்கு ரெடி.இறால் தொக்குக்கு முடிந்தவரை சின்ன வெங்காயமே யூஸ் பண்ணுங்க, டேஸ்ட் நல்லா இருக்கும். இறால் குக் பண்ணும் போது ரொம்ப நேரம் வேக வைக்க கூடாது, ரப்பர் போல ஆயிடும். அதனால சீக்கிரமாவே அடுப்பில் இருந்து இறக்கிடுங்க. 


ஓகே தோழிகளே! இந்த பிரான் தொக்க வீட்ல செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டு பாருங்க செமையா இருக்கும்!


புகைப்படங்கள்: செளந்தரபாண்டியன்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்