உங்கள் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கிறார்களா? எப்படி தெரிந்து கொள்ளலாம்!

Sep 30, 2023,05:13 PM IST

- மீனா


குழந்தைகள் பெற்றோர்களுக்கு வரம். ஆனால், இந்த வரமே பெற்றோர்களுக்கு சாபமாக மாறுவது மிகவும் கொடுமை. அதற்கான காரணம் மன அழுத்தத்தினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு, இந்த உலகில் வாழ விருப்பமில்லாமல், யாருடனும் தன்னுடைய பிரச்சனைகளையும், உணர்வுகளையும் பேச விரும்பாமல், தனிமையை விரும்பி பின்பு மன அழுத்தம் அதிகமாகும் போது தன் உயிரை கூட மாய்த்துக் கொள்ளலாம் என்று  முடிவெடுத்து நம்மை இன்னும் துயரத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள். 


இப்படி மன அழுத்தம் அதிகமாகும் போது தன் உயிரை கூட மாய்த்துக்கொள்ள துணியும் குழந்தைகளை பார்க்கும்போது மிகவும் அச்சமாகவும் அதே நேரத்தில் அதிர்ச்சியாகவும் தான் இருக்கிறது. முன்பெல்லாம் பெரியவர்கள், மன அழுத்தத்திலோ அல்லது எந்த கஷ்டத்தில் இருந்தாலும் குழந்தைகளின் முகத்தை பார்க்கும் போது அந்த கஷ்டம் எல்லாம் மறைந்து ஒரு நல்ல சூழல் உருவாகும் என்று நாம் யாவரும் சொல்ல கேட்டிருப்போம் அதை அனுபவித்தும் இருப்போம். ஆனால் இன்று அந்தக் குழந்தைகளுக்கே மன கஷ்டம் அதாவது மன அழுத்தம் ஏற்படுகிறது என்று தெரியும் போது மிகவும் வேதனையாகவே தான் உள்ளது.


குழந்தைகளின் மன அழுத்தத்திற்கான காரணங்கள்:




பெரியவர்களின் மன அழுத்தத்திற்கு பலவித காரணங்கள் சொன்னாலும் குழந்தைகளின் மன அழுத்தத்திற்கும் பல காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதில் முக்கியமானது என்னவென்றால்  குழந்தையின் பெற்றோர்  அந்த குழந்தையோடு  நேரம் செலவிடாமல் இருப்பது மற்றும் அவர்கள் பாலியல் ரீதியாக எவராலும் துன்பப்படுத்தப்படுகிறார்களா என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்தான் . ஆனால் இது மட்டும் தான் காரணமா என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ,இவைகளும் காரணமாக இருக்கின்றன. அவை என்னவென்றால் பெற்றோர்களுக்கு இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருத்தல் , அதனால் அடிக்கடி வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் பணம் வரும் மன அழுத்தம், தான் அதிகம் நேசித்த தன்னுடைய நண்பர்கள் நம்மை புரிந்து கொள்ளாமல் காயப்படுத்துதல் , எல்லாவித செயலிலும் வெற்றி மட்டுமே நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது, தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக பெற்றோர்கள் முடிவு எடுப்பது மற்றும் நாம் செய்ய நினைத்ததை செய்ய முடியாமல் போகும் தருணத்தில் கூட இந்த மாதிரி பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகிறது . 


குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது:


பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறை உள்ளவர்களாகவே இருப்பார்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. குழந்தைகளை ஒரு விஷயத்தை அல்லது ஒரு வேலையை செய்ய சொல்கிறீர்கள் என்றால் அந்த வேலையை  முழுவதுமாக செய்து முடிக்க வைக்க வேண்டும் . அப்போது  தான் பிற்காலத்தில் எந்த ஒரு வேலையும் செய்யும்போது அதை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றும். இதற்கு மாறாக குழந்தைகளுக்கு இது பிடிக்கவில்லை அல்லது சிரமமாக இருக்கிறது என்று சொன்னால் உடனே அந்த வேலையை நிறுத்த சொல்லக்கூடாது முதலில் அந்த வேலையை முடித்துவிட்டு பிறகு அதில் ஈடுபாடு இல்லை என்று  தெரிந்த உடனே அதற்கு ஏற்ப சூழ்நிலையை மாற்றிக் கொள்ளலாம்.  


அதனால் குழந்தைகளை அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் மற்றும் அவர்கள் சொல்லும் கருத்து நல்லதா இல்லையா என்று ஆராய்வதற்கு அதில் உள்ள நன்மை, தீமையை எடுத்துரைத்து அவர்களையே அதை உணர வைக்கலாம். குழந்தைகளின் வளரும் சூழ்நிலையில் பெற்றோர்களும் அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருக்கும் பட்சத்தில்  அவர்களின் மனநிலைமையும் சீராகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் பெற்றோர்களாகிய நம்மையும் பார்த்து குழந்தைகள் வளர்கிறார்கள் அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு கண்ணாடி போல் தான் .நாம் என்ன செய்கிறோம் என்பதை பிரதிபலித்து அதை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்க உந்தி தள்ளப்படுகிறார்கள். 




ஆனால்  பிள்ளைகளுக்கு  பள்ளி கல்வியை போல வாழ்க்கை கல்வியும் மிகவும் அவசியம் என்பதனை நாம் உணர வேண்டும் .பொதுவாக எல்லா பெற்றோரும் சொல்ல கேட்டிருப்போம் நான் பட்ட கஷ்டம் என் குழந்தைகள் படக்கூடாது  என்று .அவர்களை கஷ்டமே இல்லாத உலகத்தில் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம் .ஆனால் இது சாத்தியம் கிடையாது .பொதுவாக இயற்கை எப்பொழுதும் இரண்டு விஷயங்களை தான் நமக்கு உணர்த்துகிறது இரவு, பகல் .மேடு ,பள்ளம் கீழ், மேல் என்று உதாரணத்திற்கு கொள்ளலாம்.


இப்படி இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் இன்பம், துன்பம்  இவை இரண்டும் மாறி மாறி வரும் போது தான் ஒன்றின் அருமை ஒன்று இல்லாதபோது உணர முடியும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.ஆனால் நாம் இதை உணராமல் குழந்தைகளுக்கு கஷ்டம் இல்லாத வாழ்க்கையை கொடுக்க நினைத்து மேலும் அவர்களை அதிகப்படியான கஷ்டத்திற்கு ஆளாக்கி விடுகிறோம் . இந்த உலகில் மகிழ்ச்சி எப்படி இருக்கிறதோ அப்படியே கஷ்டமும் இருக்கிறது என்று சொல்லி வளர்க்க வேண்டியது பெற்றோர்களாகிய நம்முடைய கடமை. 


அது மட்டுமில்லை நம் குழந்தைகளுக்கு படிப்பு, பாட்டு, நடனம் மற்றும் விளையாட்டு என்று ஊக்குவித்தால் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது  பொதுவான கருத்து. முன்பெல்லாம் பள்ளி கல்லூரிகளில் ஆரோக்கியமான போட்டி ஒவ்வொரு மாணவர்களுக்கிடையே இருந்து வந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை நான் தான் எல்லாவற்றையும் பெஸ்ட்டாக  இருக்கணும் என்ற தலைக்கனம் குழந்தைகளிடம் அதிகமாக உள்ளத இதற்கு  பெற்றோர்கள் உன்னால் இதை செய்ய முடியும் என்று நம்பு அதற்கு பெயர் நம்பிக்கை .ஆனால் உன்னால் மட்டும் தான் செய்ய முடியும் என்று நினைக்காதே. 




ஏனென்றால் உன்னை போன்ற அனேகர் இந்த விஷயங்களை செய்வதற்கு அதிகப்படியான அவர்களுடன் உழைப்பை கொடுத்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை புரிய வைக்க வேண்டும். நம் குழந்தைகள் எது செய்தாலும் நீ தான் பெஸ்ட், உன்னால் மட்டும் தான் இவ்வளவு நன்றாக செய்ய முடியும் வேறு யாராலும் செய்ய முடியாது என்று சற்று ஓவராக தான் புகழ்ந்து விடுகிறோம். இப்படி புகழ்ச்சியை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் அவர்களால் சிறு தோல்வியை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். இதனால் அதிகப்படியான பொய்யும் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இதற்காக நம் குழந்தைகள் செய்யும் நல்ல விஷயத்தை  பாராட்டாமல் இருக்கக் கூடாது. ஆனால் பாராட்டும் போது நீ இந்த விஷயத்திற்காக எவ்வளவு பயிற்சி செய்தாய் இடைவிடாமல் எவ்வளவு உழைத்தாய் உன்னுடைய விடா முயற்சிக்கு கிடைத்த பலன் இது. இதுபோல் தொடர்ந்து முயற்சி செய்து மேலும் பல வெற்றிகளை நீ உன் வசமாக்கி கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்த வேண்டும்.


அதே நேரத்தில் தோல்வியை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் உன்னுடைய  முயற்சியை இன்னும் நீ அதிகரிக்க வேண்டும். நீ இன்னும் இதற்காக உழைக்க வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் நாமும் சில நேரத்தில் அவர்கள் தோல்வியை சந்திக்கும்போது வெற்றி அடைந்த நீ இப்படி தோல்வியை சந்திக்கலாமா என்று கூறும் வார்த்தைகள் கூட அவர்களை மனதளவில் பாதித்து விடுகிறது. வெற்றியை கொண்டாட கற்றுக் கொடுக்கும் நாம் தோல்வியையும் அனுபவமாக எடுத்துக் கொள்ளவும் அடுத்து வெற்றியை நோக்கி பயணிக்க இந்த தோல்வி உனக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். 


நான் நினைத்தது எல்லாம் எனக்கு நடந்து விடும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் நினைத்தது நடக்காமல் போகும் சூழ்நிலை வரும்போது அப்பொழுதும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு பெற்றோர்கள் ஒரு பொருளைக் கூட தன் பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று உடனே வாங்கி கொடுக்காமல் கொஞ்சம் பொறுமை காக்க வைக்கலாம் அல்லது இப்பொழுது உனக்கு அது தேவையில்லை உனக்கு தேவைப்படும்போது அது கண்டிப்பாக கிடைக்கும் என்பதனை உணர வைக்கலாம். ஏனென்றால் இந்த காத்திருப்பு அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த பொருளின் மீதான அவர்களின் தேவையை குறித்து ஈர்ப்பு கூடவோ குறையவோ செய்யலாம்.




இதை வைத்து அவர்களுக்கு அது தேவையா இல்லையா என்பதனை உணர்ந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். ஏனென்றால் இன்றைய  குழந்தைகளுக்கு சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் போக்கு அவர்களிடம் சுத்தமாக இல்லை என்று தான் சொல்லணும். தான் விரும்பியது கிடைக்கா விட்டால் உடனே அவர்கள் பிடிவாதம் பிடித்தாவது வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காத போதும் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் தான் நினைக்கும் விஷயத்தை தன் பெற்றோரிடம் சொன்னால் கூட அவர்கள் நம்மை தவறாக நினைத்து ,வரும் காலங்களிலும் நம்மை இப்படித்தான் என்று தவறாக கொள்வார்களோ என்றும். அதே நேரத்தில் தன் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விஷயத்தை சொன்னால்  வேறு யாருடன் ஆவது பகிர்ந்து கொள்ளக்கூடும் என்றும் சொல்லாமல்  அடக்கி வைத்து அது மேலும் மேலும் அதிகமாகி அழுத்தம் கொடுத்து கொள்வதாலும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. வெளிநாடுகளில் குழந்தைகளின் மன நலன்களில் அக்கறை கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசர்கள் இருப்பார்கள். அதேபோல் நம் நாட்டிலும் இத்தகைய ஒரு சூழ்நிலை இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.


குழந்தைகள் மன அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறிகள்:


எப்பொழுதும் சோக முகத்துடனே கவலையுடன் இருப்பது, அடிக்கடி மறதி ஏற்படுவது மற்றும் எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தனியாக இருக்க விரும்புவது. எப்பொழுதும் பதற்றமாக  இருப்பது. யாருடனும் தன்னுடைய கருத்துக்களை மற்றும் சந்தேகங்களையும் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருப்பது .வழக்கமாக செய்யும் வேலையை செய்யாமல் அல்லது செய்ய ஆர்வம் இல்லாமல் இருப்பது. 


எப்பொழுதும் நெகட்டிவ்வான விஷயங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு அதன்படியே தன் பேச்சின் மூலம் வெளிப்படுத்துவது. பெற்றோர்களிடம் கூட அதிகமாக பேசாமல் அவர்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்வது அல்லது சொல்லாமலே இருப்பது. இந்த மாதிரி அறிகுறிகள் குழந்தைகளிடம் இருந்தால் உடனே பெற்றோர்கள் பெற்றோர்கள் அவர்களிடம் பேசி அவர்கள் குறையை கேட்டு அதை தீர்த்து வைக்க முற்பட வேண்டும் இல்லை என்றால் , அவர்களை யாரிடமாவது அதிக அன்பான, நம்பிக்கையாக இருக்கும் உறவினர்களிடம் கூட பேச வைக்கலாம். மேலும் இதுவும் சாத்தியப்படவில்லை என்றால் யோசிக்காமல் குழந்தைகள்  மனநல மருத்துவரை அணுகி அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்