- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: என்னதான் சாப்பிடுவது.. எதைச் சாப்பிட்டாலும் பிரச்சினையை உண்டு பண்ணுதே என்று ஒரே அலுப்பாக இருக்கிறதா.. டோன்ட் ஒர்ரி பாஸ்.. உங்களுக்காகவே சத்தான ஒரு ரெசிப்பிதான் இப்ப நாம சொல்லப் போறது.. செய்வதும் சுலபம்.. சாப்பிடவும் சுவை.. கூடவே ஹெல்த்தியும் கூட.. வயிறும் நிறைஞ்சு திருப்தியாவும் இருக்கும்.
ரெட் போகா அதாங்க சிகப்பு அவல்.. அத்தோட, பச்சைபயிறு சுண்டல் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதைப் பத்தித்தான் இப்போ நாம பேசப் போறோம். நல்ல ஹெல்தியான பில்லிங் ஆன உணவு இது.. பார்க்கலாமா.. அதுக்கு முன்னாடி என்ன செய்யணும்.. கரெக்ட்.. கிச்சனுக்குள்ள போகணும்.. வாங்க போலாம்!
தேவையான பொருட்கள்
சிகப்பு அவல் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று கட் செய்யவும்
பச்சை மிளகாய் - 3
கடலை பருப்பு உளுத்தம் பருப்பு - தலா ஒரு ஸ்பூன்
வேர்க்கடலை - இரண்டு ஸ்பூன்
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
கருவேப்பிலை மல்லித்தழை - சிறிதளவு
கடுகு தாளிக்க - ஒரு ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
உப்பு காரம் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. சிகப்பு அவல் நன்றாக கழுவி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அந்த அவல் ஊற வேண்டும்
2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு வேர்க்கடலை கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
3. பிறகு அதில் கட் செய்த வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும் உப்பு சிறிது போடவும்
4. சீரகம் சிறிது போடவும்
5. தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்
6. பிறகு ஊறிய சிகப்பு அவல் இதனுடன் சேர்த்து கிளறவும் கமகமன்னு சிகப்பு அவல் ரெடி
7. மல்லித்தழை சேர்க்கவும்
8. பச்சைப்பயிறு சுண்டல்
9. பச்சை பயிறு நன்றாக கழுவி ஒரு குக்கரில் மூன்று விசில் விடவும்
10. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் போட்டு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் கீறி போடவும்
11. இவற்றை வேகவைத்த பச்சை பயிறுடன் சேர்க்கவும்
12. சிகப்பு அவல் பச்சை பயிருடன் சேர்ந்து சாப்பிட மிகவும் சுவையாகவும் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
மன ரீதியிலான பிரச்சனை... விரைவில் மீண்டு வருவேன்... நடிகை நஸ்ரியா!
இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு: நயினார் நகேந்திரன்!
இன்ஸ்டா ரீல்ஸால் மகள் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..வைரலாகும் வீடியோ..!
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை... பாஜக தேசிய தலைமை விளக்கம்!
வெயிலுக்கு இதமான குல்பி.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம்...எதிர்க்கட்சிகள் கண்டனம்!
{{comments.comment}}