சென்னை: வீடுகளில் பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சினை கரப்பான் பூச்சி தொல்லைதான். அதிலும் கிச்சனில் இருந்து கொண்டு இந்த கரப்பான்கள் போடும் ஆட்டம் இருக்கே.. முடியலை சாமி முடியலை.
கரப்பான் பூச்சிகள் வீடுகளில் மிகவும் பொதுவாகக் காணப்படும் பூச்சிகளாகும். ஒரு பூச்சி வந்து விட்டால் போதும், அவை பல்கிப் பெருகி பெரும் கூட்டமாக மாறி டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விடும். ஒரு பொருளை வைக்க முடியாது. குறிப்பாக உணவுப் பொருட்களை கரப்பான்களிடமிருந்து காப்பது பெரும் பாடாக இருக்கும்.
நோய்களைப் பரப்புவதிலும், வீட்டு சூழலை அசுத்தமாக்குவதிலும் கரப்பான்கள் டாப்பில் உள்ளன. சில நேரங்களில், இவை இரவில் சுற்றித் திரிந்தும் வீடு முழுக்க டெர்ரராக்கி விடுகின்றன. கரப்பான் பூச்சிகளை முற்றிலும் நீக்க என்னென்ன செய்லாம்.. வாங்க பார்ப்போம்.
1. கரப்பான் பூச்சிகள் எப்படி அதிகரிக்கின்றன?
கரப்பான் பூச்சிகள் இரவு நேரத்தில்தான் பொதுவாக அதிகமாக நடமாடும். அதிலும் ஈரப்பதமான இடங்களைத்தான் அவை அதிகம் விரும்பி அந்த இடத்தில் பதுங்கியிருக்கும். விரைவாக பெருகி, வீட்டின் பல பகுதிகளிலும் பரவக்கூடும். குட்டி குட்டி கரப்பான்களை இரவில் அதிகம் பார்க்கலாம்.
கரப்பான்கள் பெரும்பாலும் மீந்து போன உணவுப் பொருட்களை அப்படியே குப்பைக் கூடையில் போடுவதால் அவற்றால் ஈர்க்கப்படுகின்றன. இருட்டான மற்றும் ஈரமான இடங்களைத்தான் கரப்பான்களுக்கு ரொம்பப் பிடிக்கும். கதவு இடுக்குகள், ஜன்னல் இடுக்குகள், வீட்டில் உள்ள சிறு சிறு இடைவெளிகள், லேப்டாப்புக்குள்ளும் கூட புகும் கரப்பான்கள். அதேபோல குடிநீர் அல்லது சிங்க் குழாய்களின் பின்புறம் உள்ளிட்ட இடங்களில் இவை பதுங்கியிருக்கும்.
ஒரு கரப்பான் பூச்சி மாதத்திற்கு 40 முதல் 50 முட்டைகள் வரை இடக்கூடும். எனவே வீட்டில் ஒரு கரப்பானைப் பார்த்து விட்டால் கூட சுதாரித்து விடுங்கள். கட்டுப்படுத்தும் முறைகளைச் சீக்கிரம் மேற்கொள்வது அவசியம்.
2. வீட்டுத் தூய்மை அவசியம்
கரப்பான் பூச்சிகள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாத இடங்களில் வாழ முடியாது. எனவே, வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
உணவுப்பொருட்களை எப்போதும் மூடிய பாத்திரங்களிலேயே வையுங்கள். ஓப்பனாக விடாதீர்கள். சமையலறை மேசை, அடுப்பு, தரை மற்றும் கழிவுநீர் குழாய்களை தினமும் துடைக்க வேண்டும். குழாய்களில் இருந்து தண்ணீர் சொட்டுவதைத் தடுக்க வேண்டும்.
வீட்டு குப்பைகளை தினமும் வெளியே வீச வேண்டும். மூடியுள்ள குப்பை தொட்டிகளை மட்டும் பயன்படுத்தவும். குப்பைத் தொட்டியை அப்படியே திறந்தது போல வைக்காதீர்கள். பழைய பத்திரிக்கைகள், காகிதங்கள், மற்றும் பிளாஸ்டிக் மூடைகளை தேக்கி வைக்காதீர்கள். தூக்கி கடாசி விடுங்கள்.
குளியலறை மற்றும் கழிவறையை ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்ய வேண்டும். டேப்பில் லீக்கேஜ் இருந்தால் சரி செய்ய வேண்டும்.
3. கரப்பானை விரட்ட இயற்கை முறைகள்
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க கெமிக்கல்கள் அடங்கிய மருந்துகளை விட இயற்கையான வழிமுறைகளை கடைப்பிடிப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
வேப்பிலை (Neem Leaves/Powder)
வேப்பிலை பொடியை வீட்டு மூலைகளில் தூவலாம். வேப்பிலை எண்ணெயை தண்ணீருடன் கலந்துக் கொண்டு பூச்சிகள் வரும் இடங்களில் தெளிக்கலாம்.
பூண்டு & வெங்காயம் (Garlic & Onion Spray)
பூண்டு மற்றும் வெங்காய கலவையுடன், கடுகு எண்ணெயை கலந்து வீட்டில் தெளிக்கலாம். கரப்பான் பூச்சிகள் இந்த வாசனைக்குப் பயந்து செல்வதில்லை. அதேபோல எலுமிச்சை மற்றும் மிளகத் தூளையும் கலந்தும் தெளிக்கலாம்.
படிகாரம் (Boric Acid)
படிகாரம் பொடியை வீட்டின் மூலைகளில் தூவினால், கரப்பான் பூச்சிகள் விரைவில் அழியும். ஆனால், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இருக்கும் வீட்டில் இதை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அதேபோல கரப்பான் பூச்சிகளை விரட்ட, சில வாசனை எண்ணெய்கள் உதவும்.
புதினா எண்ணெய் (Peppermint Oil)
5 மில்லி புதினா எண்ணெயை 200 மில்லி தண்ணீருடன் கலந்துவிட்டு, பூச்சிகள் இருக்கும் இடங்களில் தெளிக்கலாம். கரப்பான் பூச்சிகள் வராது.
லாவென்டர் எண்ணெய் (Lavender Oil)
லாவென்டர் எண்ணெயின் வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. வீட்டு மூலைகளில் சில துளிகள் வைக்கலாம். அதேபோல தேங்காய் எண்ணெய் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய் ஆகியவையும் கூட கரப்பான்களுக்குப் பிடிக்காதவைதான். அதையும் பயன்படுத்தலாம்.
இவை கரப்பான் பூச்சிகளை விரட்ட மட்டுமின்றி, வீட்டில் நல்ல வாசனையையும் கொடுக்கின்றன.
5. பூச்சி மருந்துகளை உபயோகிப்பது எப்படி?
கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. என்ன செய்தாலும் வருகின்றன என்றால் பூச்சி மருந்துகளை நாடலாம். கடைகளில் கிடைக்கும் பூச்சி மருந்து ஸ்பிரே வாங்கி பயன்படுத்தலாம். வீட்டு மூலைகளில் தூவினால் பூச்சிகள் அப்போதே இறக்க ஆரம்பிக்கும்.
அதேபோல ஜெல் போன்ற மருந்துகளும் கூட உள்ளன. இவற்றை ஒருமுறை பயன்படுத்தினால், நீண்ட காலத்திற்கு பூச்சிகளை தடுக்க உதவும்.
பூச்சி மருந்துகளை உபயோகிக்கும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். முக கவசம் அணிய வேண்டும். குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களில் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். பூச்சி மருந்து வாசம் அதிகம் இருக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் மருந்துகளை தொட்டு விடாத தூரத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
பூச்சி மருந்து அடித்த பிறகு, வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
6. கரப்பான் பூச்சிகளை சிக்க வைக்கும் சிறப்பு முறைகள்
கரப்பான் பூச்சிகளை டிராப் மூலம் பிடித்தும் அப்புறப்படுத்தலாம். அதாவது தேன் மற்றும் ரொட்டியை பாட்டிலில் வைத்து ஒரு டிராப் ரெடி செய்யலாம். அதில் கரப்பான்கள் சிக்கிக் கொண்ட பின்னர் வெளியில் கொண்டு சென்று அதை அழிக்கலாம். அதேபோல வழவழப்பான பூச்சி ஒட்டும் பேப்பர் (Sticky Trap) பயன்படுத்தியும் கரப்பான்களுக்கு முடிவு கட்டலாம்.
கரப்பான் பூச்சிகளை வீடுகளில் இருந்து விரட்ட மிக முக்கியத் தேவை வீட்டூத் தூய்மைதான். குறிப்பாக சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். அங்கிருந்துதான் வீடு முழுக்க கரப்பான்கள் நடமாட்டம் ஆரம்பிக்கும். எனவே வீட்டைத், தூய்மையாக வைத்திருப்பது முதல், இயற்கை முறைகள், மற்றும் பூச்சி மருந்துகள் போன்றவை மிக முக்கியம். ஒவ்வொரு முறையையும் சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் வீடு கரப்பான் பூச்சிகளின்றி பாதுகாப்பாக இருக்கும்.
சென்னையில் விட்டு விட்டு வச்சு செய்யும் கனமழை .. 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!
நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக மத்திய அரசை கண்டித்து.. தமிழக எம்பிக்கள் கண்டனம் முழக்க போராட்டம்!
தமிழ்நாட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த மழை.. இன்றும், நாளையும் பரவலாக மழை.. தமிழ்நாடு வெதர்மேன்!
ஐ.பி.எல் விளம்பரம் பாமகவிற்கு கிடைத்த வெற்றி.. பாமக தலைவர் அன்புமணி பெருமிதம்..!
Power of Biryani.. டி.எம்.எஸ்-ஸோட வெண்கலக் குரலின் ஈர்ப்புக்கு காரணம் என்ன தெரியுமா??
மதுபான ஊழல்.. காலையிலேயே அண்ணாமலை போட்ட X குண்டு.. என்ன சொல்ல வருகிறார்?
மொரீசியஸில் பிரதமர் நரேந்திர மோடி.. ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!
இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா.. கவலைப்படாதீங்க...இயற்கை முறையில் ஈஸியா விரட்டலாம்!
முதலீட்டாளர்களுக்கு முதல் முகவரி தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
{{comments.comment}}