சென்னை: வீட்டில் அம்மா, அப்பா இருவரும் வேலை பார்ப்பவர்களாக இருந்தால் காலையில் ஏற்படும் அமளி துமளிகளையும், டென்ஷனையும் சொல்லி மாளாது. அவ்வளவு பதட்டமாக இருக்கும்.. காலை நேரம் போர்க்களமாக இருக்கும். அப்படி இப்படின்னு வீட்டு வேலையெல்லாம் முடித்து விட்டு ஆபீஸ் போய் அமர்ந்து அப்பாடான்னு ரிலாக்ஸ் ஆகும் போது கிடைக்கும் சுகமே தனிதான்.
அப்படிப்பட்ட ஒர்க்கிங் பேரன்ட்ஸா நீங்க.. வாங்க இப்படி வந்து உட்காருங்க.. முதல்ல ரிலாக்ஸ் ஆகுங்க.. காலையிலேயே டென்ஷன் இல்லாமல் கிளம்பிச் செல்ல நிறைய வழிகள் இருக்கு. அதை கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க.. உபயோகமாக இருந்தா உங்களுக்கும் நிம்மதி, எங்களுக்கும் சந்தோஷம்.
அதிகாலையில் எழுவது:
பெற்றோர்கள் அதிகாலையில் கண் விழிப்பதோடு மட்டுமின்றி, குழந்தைகளையும் எழுப்பிவிடலாம். இதனால் அவர்களுடன் செலவிட கூடுதலாக நேரம் கிடைக்கும். பொறுமையாக பள்ளிக்கு தயார் செய்வது முதல், பிடித்த உணவை சமைத்து கொடுப்பது, அன்று பள்ளியில் உள்ள விஷயங்கள் குறித்து கலந்தாலோசிப்பது, வீட்டு பாடங்களை சரி பார்ப்பது என பிள்ளைகளுக்கான விஷயங்களை செய்யலாம். மேலும் காலையில் நேரமாக எழுந்திருப்பது, குழந்தையின் பழக்கவழக்கங்களையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். நீங்களும் உங்களோட வேலையை நிதானமாகச் செய்ய டைம் இருக்கும்.
வாரம் ஒருநாள் அவுட்டிங்:
வார இறுதிகளை தயவு செய்து வீட்டிலேயே கழிக்காதீர்கள். கதவை இழுத்து மூடி விட்டு வெளியே கிளம்புங்கள். அட ஏங்க நீங்க, வாரத்தில் ஒரு நாள் தான் லீவு கிடைக்குது. அதுலயுமா வெளில போவது என்று அங்கலாய்க்காதீர்கள். ஓய்வெடுப்போம் என நினைக்காதீர்கள். கிடைக்கிற ஒரு நாளையும் உங்கள் பிள்ளைக்காக கொடுங்கள். அவர்களை எங்காவது வெளியே அழைத்துச் செல்லுங்கள். குடும்பத்துடன் சேர்ந்து ஒரு நல்ல திரைப்படத்தைப் பாருங்கள் அல்லது ஓவியம், நடனம், கைவினைப்பொருட்கள் போன்ற குழந்தை விரும்பும் எந்தச் செயலையும் ஒன்றாகச் செய்யுங்கள். இது குழந்தைகளை உங்களுடன் உணர்வுப்பூர்வமாக இணைக்கவும், அவர்களது எதிர்கால கனவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக இது அமையும்.
உங்களுக்கான நேரம்:
ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பா என்பது போல நீங்கள் எவ்வளவுதான் தலைக்கு மேல் வேலையில் பிஸியாக இருந்தாலும் உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி வையுங்கள். வேலைப் பளுவுக்கு இடையில், ஜஸ்ட் கொஞ்ச நேரம், பால்கனியில் தனியாக அமர்ந்து ஒரு கப் டீ குடித்தாலும் சரி, இல்லை ஏதாவது பாட்டுக் கேட்டாலும் சரி, இல்லை குட்டியா ஒரு டான்ஸ் போட்டாலும் சரி, அட ஜாலியாக ஒரு பாட்டுப் பாடினாலும் சரி.. அது போதும்.. அது போதுமே.. ரிலாக்ஸஸ் ஆக.. இன்னும் கொஞ்சம் கூடுதல் டைம் கிடைத்தால் அப்படியே பக்கத்தில் இருக்கும் பார்லருக்குப் போய் உங்களை அழகுபடுத்திக் கொண்டாலும் சரி.. எதுவாக இருந்தாலும் உங்களுக்கு என சிறிது நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி:
இதுதாய்யா கஷ்டமோ கஷ்டம்.. சொல்வது ரொம்பவே சுலபம். ஆனால் செய்வது தான் கடினம் அப்படின்னு நீங்க சொல்வது கேட்கிறது. ஏனெனில் வேலை செய்யும் ஒவ்வொரு அம்மாக்களும் தங்கள் வீட்டு வேலை மற்றும் குழந்தைகளை கிளப்புவது, பிறகு அலுவலகத்திற்கு தயாராவது என அதற்கே சரியாக நேரம் இருக்கும். இருந்தாலும் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். காரணம், மற்றவர்களின் நலனுக்காக உழைக்கும் நீங்க முதலில் தெம்பாக, ஹெல்த்தியா இருக்க வேண்டும் இல்லியா.. அதுக்கு இந்த உடற்பயிற்சி அவசியம் மேடம்.. ஸோ, சோம்பேறித்தனப்படாம செஞ்சு முடிங்க.
குழந்தைகளுக்கான நேரம்:
வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது அயர்ச்சியாகத்தான் இருக்கும். இருந்தாலும் ரெப்ரஷ் ஆகி விட்டு சற்று குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். அவர்களுடன் விளையாடுங்கள், கதைகள் சொல்லுங்கள், அல்லது அவர்களின் அன்றைய பள்ளி அனுபவம் பற்றி கேளுங்கள். இது அவர்களுக்கு உங்களுடன் நெருக்கமாக உணர உதவும். அவர்களும் ரிலாக்ஸ் ஆவார்கள்.. நீங்களும்தான்.
பிளான் பண்ணிச் செய்யணும்:
எதைச் செய்தாலும் பிளான் பண்ணிச் செய்யணும்னு வைகைப்புயல் வடிவேலானந்தா கூறியுள்ளார். ஸோ, உங்கள் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளை திட்டமிடுங்கள். ஒரு டைம் டேபிள் போடுங்க. எது அதி முக்கியம், எது முக்கியம், எது பிறகு பார்த்துக்கலாம்.. இப்படி லிஸ்ட் போடுங்க. அதேபோல அந்த வாரத்திற்கு சமைக்க வேண்டிய சாப்பாட்டையும் கூட லிஸ்ட்டில் சேருங்க.. பெரிய நிம்மதியாக அது இருக்கும். எதுவும் மிஸ்ஸாகவும் செய்யாது.
தன்னார்வம்:
எல்லா வேலைகளையும் நீங்களே செய்ய வேண்டியதில்லை. பிள்ளைகளுக்கும் பகிர்ந்து தரலாம். உங்கள் குழந்தைகளை தன்னார்வமாக செயல்பட ஊக்குவிக்கவும். அவர்களுக்கு சிறிய பொறுப்புகளை கொடுத்து, அவற்றை நிறைவேற்ற உதவுங்கள். இது அவர்களின் சுயநினைவையும், பொறுப்புணர்வையும் மேம்படுத்தும். உங்களுக்கும் கூடமாட உதவியாக இருக்கும்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்:
இப்பெல்லாம் எள்லாத்துக்கும் டெக்னாலஜி வந்துருச்சு பாஸ்.. ஸோ, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உங்கள் வேலைகளை எளிதாக்குங்கள். ஆன்லைன் கல்வி, வீடியோ அழைப்புகள், மற்றும் வேலைகளை நிர்வகிக்க பயன்படும் செயலிகள் போன்றவற்றை பயன்படுத்தி, உங்கள் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளை சமநிலைப்படுத்துங்கள்.
உறவுகளை பராமரிக்கவும்:
எப்பவும் உறவுக்காரங்க, நமக்கு சாதமாக இருக்க மாட்டாங்கதான.. அதற்காக அவர்களை விட்டு விடவும் முடியாது இல்லையா.. ஸோ,
உங்கள் குடும்ப உறவுகளையும் பராமரிக்கவும். பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். அவர்களுக்கு தேவையானதை செய்ய முயலுங்கள்.. அவர்களுடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும், உங்களுக்கும் மனசுக்கு நல்லாருக்கும்.
வாழ்க்கை அழகானதுங்க.. ஒரே வாழ்க்கைதான்.. முடிஞ்ச வரைக்கும் எரிச்சல், டென்ஷன் இல்லாமல் ஜாலியா கொண்டு போலாமே.. என்ன சொல்றீங்க!
இவன் என்ன அழைப்பது.. நாம் என்ன போவது.. என்று கௌரவம் பார்க்காதீர்கள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
வெயிலை சமாளிக்க தயாராகுங்க மக்களே.. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வெயில் சுட்டெரிக்குமாம்!
நடிகர் சிவாஜிகணேசன் வீட்டை ஜப்தி செய்ய.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீங்க ஒர்க்கிங் பேரன்ட்டா.. காலையிலேயே டென்ஷனாகுதா.. Chill ப்ளீஸ்.. சிம்பிளா சில டிப்ஸ்!
10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு: மாணவர்கள் புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு!
லாட்டரி சீட்டு போலதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது: டிடிவி தினகரன் பேட்டி!
2025 ஆஸ்கர் விருதுகளில்.. 5 விருதுகளை அள்ளிக் குவித்த.. அனோரா திரைப்படம்!
சீமானுக்கு எதிரான வழக்கு... இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.. உச்ச நீதிமன்றம்!
என் உச்சி மண்டையில சுர்ருங்குது.. காரணம் வெயில் பாஸ்.. முடிஞ்சா இதெல்லாம் சாப்பிட்டுப் பாருங்களேன்!
{{comments.comment}}