மோடி 3.ஓ... புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு.. தெலுங்கு தேசத்துக்கு எத்தனை?

Jun 08, 2024,09:59 PM IST

டெல்லி : நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜூன் 09) பதவியேற்க உள்ளார். அவரது தலைமையில் அமைய போகும் மத்திய அமைச்சவையில் யாருக்கு எல்லாம் வாய்ப்பு உள்ளது என்பது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.


லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. பாஜக ,லோக்சபா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோடி தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் நடந்து வருகிறது. 




நிதின் கட்காரி - ராஜ்நாத் சிங்


இதுவரை வெளியான தகவல்களின் படி புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் பாஜக மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இவர்களுக்கு எந்த துறை ஒதுக்கப்பட உள்ளது என்ற தகவல் இதுவரை ரகசியாகவே வைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பியூஷ் கோயல், நாராயண் ரானே உள்ளிட்டோரும் புதிய அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது. 


மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை நிதின் கட்காரிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை பியூஷ் கோயலுக்கும் வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு கூடுதலாக உணவு பாதுகாப்புத்துறை, ஜவுளித்துறை, பொது விநியோகமும் உள்ளிட்ட துறைகளும் அவருக்கு வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மோடி 2.ஓ அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கிற்கு மீண்டும் அதே பதவி கொடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 


தெலுங்கு தேசத்திற்கு 4




இதோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 மத்திய அமைச்சர் பதவியும், ஒரு இணையமைச்சர் பதவியும் கொடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது மற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திற்கும் 2 மத்திய அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.  இதற்காக லாலன் சிங், சஞ்சய் ஜா மற்றும் ராம் நாத் தாகூர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


மற்றவர்களுக்கு ஆளுக்கு 1


இதே போல் லோக் ஜனசக்தி மற்றும் பீகாரின் இந்துஸ்தான் அவாமி மோர்சா கட்சியின் ஜிதன் ராம் மஞ்ஜி ஆகியோருக்கும் தலா ஒரு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. சிவ சேனாவிற்கு இணையமைச்சர் பதவி, அஜித் பவார் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுப்பதாக பாஜக உறுதி அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. 


உ.பி., மாநிலத்திற்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், தெற்கில் கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அரியானா மாநிலத்தில் இருந்து இந்தர்ஜித் சிங்கிற்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்