சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்கள் சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது. வட தமிழ்நாட்டில் அதிகாலையில் பனி மூட்டம் தொடர்கிறது. அதேசமயம், பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.
இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதேசமயம், அதிகாலையில் நி்லவும் பனிமூட்டம் அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்ப நிலை 36.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. குறைந்தபட்ச வெப்ப நிலையும் அதே கரூர் பரமத்தியில்தான், 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு.. முதல் முறை எம்.எல்.ஏ.. டெல்லியின் 4வது பெண் முதல்வராகிறார்!
சாம்பியன்ஸ் டிராபி போட்டின்னு வந்துட்டா.. விராட் கோலிக்கு லட்டு மாதிரி.. என்னா ஆட்டம் பாருங்க!
பிப்.25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்.. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் மது, போதைப் பொருட்கள்தான்.. ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன.. நடவடிக்கை எடுங்க.. டாக்டர் அன்புமணி கோரிக்கை
காலைல 3 மணி இருக்கும்.. சேவல் கொக்கரக்கோன்னு கூவிருது.. கோர்ட்டுக்குப் போன அடூர் ராதாகிருஷ்ணன்!
வடிவேலு போட்டோவை ஷேர் செய்த பார்த்திபன்.. மீண்டும் கூட்டணியா.. பழைய பூங்காற்று திரும்புமா?
வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மனிதர்களை மட்டுமல்லாமல்.. ஆடு மாடுகளையும் கடிக்கும் வெறிநாய்கள்.. சீமான் முக்கிய கோரிக்கை!
{{comments.comment}}