தமிழ்நாட்டில் மீண்டும் ..108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை.. வெயில் சுட்டெரிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்

May 27, 2024,06:16 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு சில இடங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மே மாத தொடக்கத்தில் வெயில் அதிகரித்து வந்த நிலையில், பின்னர் தமிழ்நாட்டில் பரவலாக கன முதல் மிக கனமழை வரை  பெய்து , மக்களை மகிழ்வித்தது. இதனால் பூமியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இதற்கிடையே வங்க கடலில் உருவான ரெமல் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை வங்கதேசம் மற்றும் மேற்குவங்க கடற்கரை இடையே  கரையை கடந்தது.

இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது, தமிழ்நாட்டில் வரும் நாட்களில் மழை அளவு குறைந்து தமிழ்நாட்டில் பரவலாக வெப்பம் அதிகரிக்க கூடும் என ஏற்கனவே அறிந்திருந்தனர்.




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாட்டில் மீண்டும் வெயில் சுட்டெரிக்கும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் வடகடலோர மாவட்டங்களான ஆந்திராவை ஒட்டி உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் வரும் நாட்களில் ஒரு சில இடங்களில் வெயில் அதிகரிக்கும். அப்போது 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும்.குறிப்பாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 108 டிகிரி பாரன்ஹீட்டை  தாண்டி வெயில் கொளுத்தும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவிலான பெருமழையை எதிர்பார்க்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்