உள்துறை செயலாளர் அமுதா திடீர் இடமாற்றம்..10 மாவட்ட கலெக்டர்களும் டிரான்ஸ்பர்

Jul 16, 2024,05:16 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் உள்துறை செயலாளராக இருந்து வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா இடமாற்றம் செய்யப்பட்டு, வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். 


10  மாவட்ட கலெக்டர்கள் உள்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உள்துறைச் செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


பி. அமுதா இடமாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை ஓய்வு நாளன்று சஸ்பெண்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமுதா. இதையடுத்து கடைசி நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார். இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.




இந்த நிலையில்தான் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. காவல்துறையின் பெயர் இதில் பெருமளவில் டேமேஜ் ஆனது. இதையடுத்து சென்னை போலீஸ் ஆணையர், கூடுதல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது காவல்துறையைக் கவனித்து வரும் உள்துறையின் செயலாளராக இருந்து வந்த அமுதாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


முதல்வரின் குட்புக்கில் இருந்து வந்தவர் அமுதா ஐஏஎஸ். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்குகளின் போது கூடவே இருந்து எல்லாப் பணிகளையும் கவனித்துக் கொண்டவர். இதன் மூலம் முதல்வரின் நன்மதிப்பையும் பெற்றவர். தற்போது அவர் சக்தி வாய்ந்த உள்துறைப் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


பிற இடமாற்ற விவரம்:


சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு அந்தப் பொறுப்பில் குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். என்.எம். சங்கர ராவ், ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். விஜயராணி, சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலச்சந்தர் அறிவிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளராக ஹர்சகாய் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக ராஜாராமன் நியமனம்



புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள்:


புதுக்கோட்டை - அருணா, ராணிப்பேட்டை -  சந்திர கலா, அரியலூர் -  ரத்தினசாமி, நீலகிரி - லட்சுமி பாவ்யா தனீரு, தஞ்சாவூர் - பிரியங்கா, நாகப்பட்டனம் - பி.ஆகாஷ், கடலூர் - சிபி ஆதித்யா செந்தில் குமார், கன்னியாகுமரி - அழகு மீனா, பெரம்பலூர் - கிரேஸ் லயிரின்டிகி பேசாவு, ராமநாதபுரம் - சிம்ரஞ்சித் சிங் கெலான், 


கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளராக கோபால் நியமனம். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி அறிவிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்