சென்னை: மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா ஏப்ரல் 4 மற்றும் 5ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சி சார்ந்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகள் என மாநிலம் முழுவதும் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தமிழக முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது பாஜக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள கட்சித் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
வரும் ஏப்ரல் நான்காம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மறுநாள் அதாவது ஏப்ரல் ஐந்தாம் தேதி சென்னையிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார் என பாஜக தெரிவித்துள்ளது.
இவருடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்து பேசி விட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}