ஒகேனக்கல் காவிரி ஆற்றில்.. பெரும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!

Aug 01, 2024,02:14 PM IST

சென்னை:   ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை வரை வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில், தற்போது 1. 82 லட்சம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காலை வரை 1.70 லட்சம்  கன தண்ணீர் வந்து கொண்டிருந்தது.




இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1. 82 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அதேபோல் ஒகேனக்கலில் உள்ள ஐந்து அருவிகளும் தண்ணீரால் மூழ்கியுள்ளன.


ஆற்றில் பரிசல் இயக்கவும் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் குளிக்கவும் 16 வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடிப்பெருக்கின் போது அனுமதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற ஆற்றுப் பகுதிகளில்  செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மறுபக்கம், மேட்டூர் அணையில் பாதுகாப்பு  கருதி விநாடிக்கு 2.20 லட்சம்கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்