தொடர் கனமழை... காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு...ஒகேனக்கலில் குளிக்க, படகு இயக்க தடை

Jul 16, 2024,03:29 PM IST

தருமபுரி:  தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்தால், பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும்  தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கர்நாடக மாநிலம் மைசூர், குடகு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் மொத்த கொள்ளவான 84 அடியில், தற்போது 83 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், கர்நாடகாவில்  உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 25,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.




கபினி அணையில் இருந்து 25,000 கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 550 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கர்நாடக அணைகளில் இருந்தும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது.


நேற்று இரவு வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


காவிரியில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் காவிரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து விரைவில் அணை நிரம்ப வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்