மக்களே உஷார்.. சீனாவில் பரவும் புதிய hmpv வைரஸ்.. உண்மை நிலை என்ன.. என்னெல்லாம் பாதிப்பு வரும்?

Jan 03, 2025,08:41 PM IST

பீஜிங் : சீனாவில் புதிதாக பரவி வரும் hmpv எனப்படும் human metapneumovirus வைரஸ் வேகமாக பரவி வருவதாக சோஷியல் மீடியாக்களில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் விரைவில் அவசர நிலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


2019ம் ஆண்டில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டி வைத்தது. கோடிக்கணக்கான உயிர்களை பலி கொண்ட பிறகு இதற்கான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது தான் உலக நாடுகள் பலவும் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளன. இருந்தாலும் கோவிட் சமயத்தில் போடப்பட்ட பல கட்டுப்பாடுகள் உலகின் பல நாடுகளிலும் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. 


தற்போது கொரோனா பரவலில் இருந்து விடுபட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் சீனாவில் பரவி வருவதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. ஆனால் சீன சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார மையம் இது வரை புதிய வைரஸ் பரவுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிட்டு, உறுதி செய்யவில்லை.  மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றோ, அவசர நிலை அறிவிக்கப்படவில்லை என்றும் இதுவரை உலக சுகாதார மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.




சீன மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் மாஸ்க் அணிந்த படி, சிகிச்சைக்காக காத்திருப்பது போன்ற வீடியோவும், நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவது போலவும், தகன மேடைகள் பிணங்களால் நிரம்பி வழிவதாகவும் பலர் சோஷியா மீடியாவில் வீடியோ மற்றும் தகவல் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மை அது கிடையாது. சீனாவில் தற்போது நிமோனியா, இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ்கலால் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சிகிச்சை பெறுவதற்காக தான் அதிகமான மக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.


அதே போல், human metapneumovirus என்பது தற்போது புதிதாக பரவும் வைரஸ் கிடையாது. இது 2021ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வைரஸ் வகையாகும். தற்போது இன்ஃபுளுயன்சா ஏ மற்றும் human metapneumovirus ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தான் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். human metapneumovirus என்பது 3 ஆண்டுகளுக்கு முன் பரவிய கோவிட் 19 வகை வைரசை போன்றது தான். அதற்கான தடுப்பு மருந்துகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. குழந்தைகளையும், வயது முதிர்ந்தவர்களையும் இந்த வைரஸ் எளிதில் பாதிக்கும் என்பதால் அதிகமானவர்களுக்கு நோய் பரவி உள்ளது.


இதன் அறிகுறிகள் நிமோனியா காய்ச்சல் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், மூக்கில் தண்ணீர் வடிதல் போன்ற சாதாரண அறிகுறிகள் தான் இருக்கும். இது எளிதில் பரவக் கூடியது என்பதாலேயே பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிந்து கொண்டுள்ளனர். இதனால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என உலக சுகாதார மையம் கேட்டுக் கொண்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அபார்ட்மென்ட் நாய், பூனைகளுக்கு ஹேப்பி நியூஸ்.. வளர்க்க கட்டுப்பாடு கிடையாது.. சென்னை கோர்ட் அதிரடி

news

அச்சச்சோ.. சீனாவிலிருந்து வந்துருச்சு.. இந்தியாவின் முதல் HMPV வைரஸ்.. பெங்களூருவில் கண்டுபிடிப்பு

news

தமிழ்நாடு முழுவதும்.. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு.. கலெக்டர்கள் வெளியிட்டனர்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படவில்லை.. வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

news

3வது ஆண்டாக சர்ச்சை.. தமிழ்த் தாய் வாழ்த்தால் தொடரும் சலசலப்பு.. வெளிநடப்பு செய்த ஆளுநர்!

news

சட்டசபைக் கூட்டம்.. தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளியேறினார்.. ஆளுநர் ரவி.. அதிமுக அமளி!

news

CPI (M).. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு

news

சிந்து வெளிப் புதிர்.. விடை கண்டுபிடிப்போருக்கு.. 1 மில்லியன் டாலர் பரிசு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்