டில்லி : இந்தியாவில் பெங்களூரு, அகமதாபாத்தை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்திலும் HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வைரஸ் குறித்து பீதி தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சீனாவில் கடந்த சில வாரங்களாகவே HMPV வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. மிக வேகமாக இந்த வைரஸ் பரவி, குழந்தைகளை குறி வைத்து தாக்கி வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் உலக நாடுகள் பலவும் பதற்றம் அடைந்து வருகின்றன.
இந்நிலையில் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் HMPV வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. நேற்று காலை பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொன்ன சிறிது நேரத்திலேயே பெங்களூருவில் மற்றொரு குழந்தை, குஜராத்தின் அகமதாபாத்தில் 2 மாத குழந்தைக்கும் வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் ஒரு குழந்தைக்கும், சேலத்தில் ஒரு குழந்தைக்கும் HMPV வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இரு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை என்பதால் பொது மக்கள் யாரும் கவலைப்பட அவசியமில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகள் ஜனவரி 6ம் தேதி, மத்திய சுகாதார செயலாளருடன் நடைபெற்ற வீடியோ கான்பிரன்சிஸ் ஆலோசனையில் ஈடுபட்ட போது, இந்த வைரஸ் ஒன்றும் புதியது கிடையாது. 2001 ம் ஆண்டு முதலே இருந்து வருவது தான். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்து, போதிய ஓய்வு, அறிகுறிகளுக்கான மருந்துகளும் எடுத்துக் கொண்டே குணமாகி விடும் என கூறி உள்ளனர்.
இது இன்ஃபுளுயன்சா வகை வைரசை சேர்ந்தது தான். இருந்தாலும் கூட்டமான இடங்களில் மாஸ்க் அணிந்து செல்வது, கைகளின் சுத்தத்தை பாதுகாப்பது போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும், லேசான அறிகுறிகள் இருக்கும் போது தேவையான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
{{comments.comment}}