லோக்சபாதேர்தல்.. "இந்துக்கள்" பாஜகவை கரையேற்றி விடுவார்கள்.. ஆனால் மோடி மாஜிக் எடுபடாது.. சு.சாமி

Feb 25, 2024,05:33 PM IST

பாட்னா:  மக்களிடையே அதிகரித்துள்ள இந்து என்ற உணர்வு பாஜகவை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைக்கும். மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். ஆனால் மோடி மேஜிக் இந்த முறை பெரும் பங்காற்றாது என்று மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.


பாஜகவுக்குள் இருந்து கொண்டே பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களைக் கூறி வருபவர் சுப்பிரமணியன் சாமி. குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சிப்பவர். இவரை பாஜக தலைமை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.


இந்த நிலையில் பாட்னாவுக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது லோக்சபாதேர்தலில் பாஜகவின் வாய்ப்பு குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சாமி பதிலளிக்கையில், மக்களிடையே மிகப் பெரிய அளவில் இந்துத்தவ உணர்வு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்து என்பது குறித்து பெருமிதம் காட்ட ஆரம்பித்துள்ளனர் மக்கள். அது பாகவை கரையேற்றி விடும். மிகப் பெரிய வெற்றியே கிடைக்கும்.




வருகிற லோக்சபா தேர்தலில் இந்த முறை மோடி மாஜிக் வெற்றி பெறாது, எடுபடாது, அது முடிந்து போய் விட்டது. பாஜகவும் சரி அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸும் சரி தனி நபர்களை நம்பி செயல்படுவதில்லை. சிந்தாந்தமும், அமைப்பும்தான் இங்கு முக்கியமானது, பிரதானமானது.


முதல் முறையாக நாட்டில் உள்ள இந்துக்களிடேயே நாம் இந்துக்கள் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. தங்களது அடையாளம் குறித்து பெருமைப்படுகிறார்கள். நேரு காலத்தில் திணிக்கப்பட்ட வித்தியாசமான எண்ணங்களிலிருந்து அவர்கள் விடுபட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மோடியோ, மற்றவர்களோ காரணம் கிடையாது.


நிதீஷ் குமார் எப்போதுமே நம்மவர்தான்.  அவர் ஏன் நம்மை விட்டுப் போனார் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவர் புத்திசாலி, தவறுகளை கற்றுக் கொண்டு விட்டார். இந்து உணர்வுகளுக்கு எதிராக போவது ஆபத்து என்பதை உணர்ந்து விட்டார். இதனால்தான் பாஜகவுடன் மீண்டும் இணைந்து விட்டார்.


ராகுல் காந்தியும், அவரது தாயாரும் விரைவில் சிறைக்குப் போவார்கள். அதை நான் பார்ப்பேன் என்று கூறினார் சுப்பிரமணியன் சாமி.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்