பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக.. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்துப் பெண்!

Dec 26, 2023,06:31 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் போட்டியிடுகிறார். அவருக்கு இந்த வாய்ப்பை மறைந்த பெனாசிர் பூட்டோவின், பாகிஸ்தான் மக்கள் கட்சி கொடுத்துள்ளது.


இப்பெண்ணின் பெயர் சவீரா பர்காஷ். இவர் ஒரு டாக்டர். இந்து மதத்தைச் சேர்ந்தவர்.  முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் இதுவரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. அந்த வகையில்  புதிய வரலாறு படைக்கிறார் சவீரா பர்காஷ்.


கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குட்பட்ட புனர் மாவட்டத்திலிருந்து (தொகுதி பெயர் பிகே 25) பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுகிறார் சவீரா. இவர் தற்போது அந்த மாகாணத்தின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மகளிர் அணி பொதுச் செயலாளராக இருக்கிறார். டிசம்பர் 23ம் தேதி அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.




பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 5 சதவித இட ஒதுக்கீட்டை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேர்தலில் போட்டியிடுவது குறித்து சவீரா பர்காஷ் கூறுகையில், 2022ம் ஆண்டு அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் நான் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தேன். மனிதகுலத்துக்கு சேவையாற்றுவது எனது ரத்தத்தில் ஊறியுள்ளது. குடும்பத்தில் பலரும் டாக்டர்கள் என்பதால் இது இயல்பாகவே வந்து விட்டது. 


அரசு மருத்துவமனையில் நான் பணியாற்றியபோது ஏழைகளும், நலிவடைந்த பிரிவினரும் படும் கஷ்டங்களைப் பார்த்துப் பார்த்து எனக்கு எம்.பியாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எனது தந்தை தான் சார்ந்த பகுதியில் வசித்து வரும் ஏழைகளுக்காக பாடுபட்டவர். அவரது வழியைப் பின்பற்ற வேண்டும் என்று நான்  தீவிரமாக இருந்தேன். இப்போதுதான் அது நனவாகப் போகிறது என்றார் அவர்.


சவீரா பர்காஷின் தந்தை ஓம் பர்காஷ். கடந்த 35 வருடமாக ஏழைகளுக்காக சேவையாற்றியவர். சமீபத்தில்தான் அவர் மருத்துவப் பணியிலிருந்து  ஓய்வு பெற்றார் என்பது நினைவிருக்கலாம். இவரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்தான்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்