மீண்டும் பதட்டத்தில் ஹரியானா.. "நு" நகரில் ஊர்வலம் நடத்த இந்து அமைப்பு அழைப்பு

Aug 28, 2023,09:53 AM IST
சண்டிகர்: ஹரியானா மாநிலம் நு நகரில் சமீபத்தில்தான் பெரும் கலவரம் வெடித்து தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அங்கு மீண்டும் பேரணி நடத்த சர்வ் ஜாதிய இந்து மகாபஞ்சாயத் என்ற இந்து அமைப்பு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பதட்ட நிலை காரணமாக அங்கு பள்ளிகள், வங்கிகள் மூடப்பட்டு விட்டன.

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நு நகரில் ஜூலை 31ம் தேதி விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகியவை பேரணி நடத்தின. அது பின்னர் பெரும் கலவரமாகவும், வன்முறையாகவும் மாறியது. முஸ்லீம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். ஒரு மசூதி தீவைத்து எரிக்கப்பட்டது. பலர் உயிரிழந்தனர். பல சொத்துக்கள் சூறையாடப்பட்டன.  இந்தக் கலவரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. டெல்லி அருகே வரை கலவரம் பரவி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. 

இதைத் தொடர்ந்து அங்கு பேரணிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஷோபா யாத்திரா என்ற பெயரில் ஒரு பேரணியை நடத்த இந்த அமைப்பு  அழைப்பு விடுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி தரவில்லை. ஆனால் அனுமதியை மீறி பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் நு நகரம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். கிட்டத்தட்ட 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 கம்பெனி பாராமிலிட்டரி படைகளும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வங்கிகள் அடைக்கப்பட்டுள்ளன. கடைகளும் மூடப்பட்டுள்ளன. பல்க் எஸ்எம்எஸ் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் இன்டர்நெட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.  நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் வாகன தணிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்