இடைக்கால பட்ஜெட் 2024.. வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை.. முக்கிய அம்சங்கள்!

Feb 01, 2024,05:08 PM IST
புதுடெல்லி:  நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களின் தொகுப்பு:

சமூக அடிப்படையில், புவியியல் அடிப்படையில், மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர். ரேஷனில் இலவச உணவு பொருட்கள் கொடுத்ததன் மூலம் உணவுக்கான கவலையை நீக்கி விட்டோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்துகிறோம். மீண்டும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.

பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா, பேரிடர் காலங்களில் பல நெருக்கடிகளை கொடுத்த போதிலும் அதிலிருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டு வந்தது. இந்தியா- ஐக்கிய அரபு- எமிரேட்ஸ்- ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார காரிடார் பெரும் மாற்றங்களை கொண்டு வரும். ஏழைகள் ,பெண்கள், இளைஞர்கள், மற்றும் விவசாயிகளுக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை தீட்டி வருகிறது.

2047ல் புதிய இந்தியாவை படைப்போம். சமூக நீதியே பாஜகவின் பிரதான நோக்கம் . ஐந்து கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டு உள்ளோம். ஏழைகள், விவசாயிகள்,  இளைஞர்கள் ,பெண்கள் ஆகிய நான்கு தரப்பினரின் முன்னேற்றத்திற்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது . பெண்களுக்கு முத்ரா திட்டத்தில் 30 கோடி முறை கடன் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிகடன்கள் வழங்கப்பட்டுள்ளன. 78 லட்சம் சாலையோரம் வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.




மக்களின் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. எங்களது அரசு நிர்வாகம், வளர்ச்சி, செயல் திறன், ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. உயர் கல்வித்துறையில் பெண்களின் பங்கு 28% அதிகரித்துள்ளது. பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் மூலம் 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைத்துள்ளது.

வரலாறு காணாத வளர்ச்சி ஏற்படும்: அடுத்த 5 ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்படும். நிதித்துறை வலுவாக இருப்பதால் சேமிப்புகள், முதலீடுகளுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. வரி சீரமைப்பு நடவடிக்கைகளால் வரித்தளங்கள் அதிகரித்து, வலுவான நிதி நிலையில் உள்ளன. டிஜிட்டல் இந்தியா, இந்தியாவின் பொருளாதாரத்தை முறைபடுத்தியுள்ளது. அனைத்து கட்டமைப்பு வசதிகளுக்கும் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 40,000 ரயில் பெட்டிகளை வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். மாநிலங்களுக்கு வட்டி இல்லாத கடனாக 1.3 லட்சம் கோடி கடன் உதவி. வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 5.8%. இது பற்றாக்குறையை 4.5% குறைக்க முயற்சிக்கிறோம். லட்சத்தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் துறைமுக தொடர்புகளை அதிகரிக்கவும், பிற வசதிகளை ஏற்படுத்தவும், முன்னுரிமை தரப்படும். மாநிலங்களுக்கு 5 வருட காலத்திற்கு வட்டி இல்லாமல் 75,000 கோடி கடன் திட்டம் அமல்படுத்தப்படும்.

நேரடி முதலீடுகள் அதிகரிப்பு: கடந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் அளவு 596 பில்லியன் டாலராக இருந்தது. சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவிலான உதவிகள் செய்ததன் காரணமாக இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாகியுள்ளனர். 9 கோடி பெண்களுடன் உள்ள 83 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஊரக சமூக பொருளாதாரம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கூறியுள்ளார்.

ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 1.4 கோடி இளைஞர்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளனர். புதிதாக 3000 ஐடிஐக்களை உருவாக்கியுள்ளோம். 54 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைந்துள்ளது. பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு முன்னுரிமை கொடுத்து மேம்படுத்தப்படும்.





15 எய்ம்ஸ் மருத்துவமனைகள்: கடந்த ஆண்டுகளில் 7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 390 பல்கலைக்கழகங்களை உருவாக்கியுள்ளோம். மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், புவியியல் ரீதியில் பல மாற்றங்களைச் சந்தித்து வருவதாலும் இதை சமாளிப்பது தொடர்பாக உயர் மட்டக் கமிட்டி அமைத்து ஆலோசனை நடத்தப்படும். 

மின்னணு தேசிய விவசாய மண்டிகள் மூலம் 1361 மண்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 1.8 கோடி விவசாயசிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. வர்த்தகமும் ரூ. 3 ல ட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பால் விவசாயிகள்: பால்பண்ணை விவசாயிகளுக்காக விரிவான திட்டம் வகுக்கப்படும். உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. ஆனால் கறவை அதிகம் உள்ள மாடுகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மீன்வளத்துறைக்கு என தனியாக துறை அமைத்தது பாஜக அரசுதான். அவர்களுக்கான சிறப்புத் திட்டங்களையும் தீட்டி தொடர்ந்து மீன்வளத்துறையை மேம்படுத்தும் நோக்கில் நாங்கள் செயல்படுவோம்.

பிரதான் மந்திரி கிஸான் சம்பாதா யோஜனா திட்டத்தால் 38 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 

ஆயுஷ்மான் பாரத் திட்டம்: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் அனைத்து ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு சுகாதார பாதுகாப்பு வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தாய் சேய் நல திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வபருகிறது. அங்கன்வாடி மையங்கள் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷான் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கர்ப்பப் பை புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயது வரைக்குட்பட்ட  பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை அரசு ஊக்குவிக்கும்.

நாடு முழுவதும் மருத்துவமனை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் தேவையான அளவுக்கு கூடுதல் மருத்துவமனைகளைக் கட்ட மத்திய. அரசு நடவடிக்கை எடுக்கும்.

நடுத்தர வர்க்க மக்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்குவதற்காக சிறப்புத் திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் வாடகை வீடுகள், குடிசைகள் உள்ளிட்டவற்றில் வசித்து வரும் நடுத்தர வர்க்க மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்