கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 190 க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த மெத்தனாலை சப்ளை செய்த பலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி எதிர்க்கட்சிகளான பாஜக, பாமக, அதிமுக, தேமுதிக ஆகியவற்றின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று உத்தரவிட்டது.
இதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்து நீதிபதிகள் கூறுகையில், மாநில அரசு விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவராது. எனவே விசாரணை அமைப்பை மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ அல்லது என் ஐ ஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது காவல்துறைக்கு தெரியாமல் நடந்தது என்பதை ஏற்க முடியாது. மாநில போலீசார் சம்பவத்தை கண்டும் காணாமல் இருந்துள்ளது தெரிகிறது. அதே நேரத்தில் போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப்பெற்றது தவறு. சிபிசிஐடி விசாரணைகளில் பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}