கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இபாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில், இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலைபேசி எண் மற்றும் கைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களுக்கு கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இது போன்ற சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டது தான் இபாஸ் முறை. இந்த இபாஸ் முறையை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இபாஸ் பெறுவதற்கான epass.tnega.org என்ற இணைய முகவரியை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். பெயர்,முகவரி, எந்த வாகனம், எத்தனை பேர், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்த பின்னர் தான் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்களை க்யூஆர் கோடு மூலம் தெரிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர்கள் செல்போன் மூலமாகவும், வெளி நாட்டை சேர்ந்தவர்கள் இ-மெயில் முகவரி மூலமாகவும் இ-பாஸ் பெறலாம். அரசு பேருந்துகளில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இ-பாஸ் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதால், கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே க்யூஆர் கோடு மூலம் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இ-பாஸ் பெறாத வாகனங்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த இடத்திலேயே இ-பாஸ் பதிவு செய்யப்பட்ட பிறகே வானங்கள் மற்றும் டூவிலர்கள் அனுமதிக்கப்படுகின்றன. இன்று மட்டும் 3,792 வாகனங்களுக்கு இ-பாஸ் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். மேலும், இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 0451-29900233 என்ற தொலைபேசி எண் மற்றும் 9442255737 என்ற கைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊட்டியில் தனியார் வாகனங்களுக்கு தான் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் மற்றும் அரசு சார்ந்த வாகனங்கள், உள்ளூர் வாகனங்களில் பயன்படுத்தப்படும் டி என் 43 பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் நடைமுறை கிடையாது என அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல கூடிய கல்லார் என்ற பகுதியில் இபாஸ் சோதனை நடைபெற்று வருகிறது. இங்கு வைத்து வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!