தமிழ்நாட்டில்.. இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. ஓரிரு இடங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு!

Jul 17, 2024,10:51 AM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மிக  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். அதனால் அந்தப் பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை எதிரொலியாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.




நீலகிரியில் வெளுக்கும் மழை:


நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என அறிவித்ததை போல் கடந்த இரண்டு நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி மற்றும் அவலாஞ்சியில் தான் அதிகம் மழை பதிவாகியுள்ளது.


இப்பகுதிகளில் இடைவிடாத மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் உதகையிலும் தொடர் கனமழை காரணமாக அப்பகுதியில் விளையக்கூடிய காய்களின் விலையும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சைனீஸ் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.


இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில்  மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்பதால் தமிழ்நாட்டில் இன்று  மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மழை தொடரும்:


இது தவிர கேரளா மற்றும் கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை தொடரும். அதேபோல் வட மாநிலங்களிலும் வரும் ஐந்து நாட்கள் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மும்பையில் மீண்டும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.


நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் இன்றும் கனமழை தொடரும்.அதேபோல் திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


பேரிடர் மீட்பு குழு: 


நீலகிரி மாவட்டத்தில் இன்று கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இப்பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கூலங்கல் ஆறு, நடுமலையாறு ஆறு, சோலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 34 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அப்பர் பவானியில் 21.7, தேவாலாவில் 15.2 சென்டிமீட்டர், பந்தலூரில் 13.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் எமரால்டு மற்றும் சேரங்கோடு பகுதிகளில் தலா 12.8 செமீ,குந்தாவில் 10.8 சென்டிமீட்டர், பாடந்துறையில் 10.2 சென்டிமீட்டர், ஓவேலி மற்றும் கூடலூரில் தலா 9.8 சென்டிமீட்டர், உதகை நடுவட்டத்தில் 5.8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்