சென்னை: தமிழ்நாட்டில் நேற்று இரவு அநேக இடங்களில் கன மழை பெய்த நிலையில் தற்போது சென்னை, திருவள்ளூர், கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று நாளையும் கன மழை முதல் அதிக கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி தற்போது மழை தீவிரமடைந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
சென்னை:
சென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து காலையில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையிலும், புறநகர்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. புயல் காலத்தில்தான் இப்படிப் பெய்யும். ஆனால் இப்போதே மழை வெளுத்தெடுப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தியாகராய நகரில் நேற்று இரவு பெய்த கனமழையால் ராட்சத மரம் முறிந்து கீழே விழுந்தது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தற்போது மரத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது போன்ற குடியிருப்பு பகுதிக்குள் அபாயகரமான மரங்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிளைகள் இருந்தால் அதனை அகற்ற புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றால் சென்னை மாநகராட்சி 1813 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் அழைக்கலாம். அல்லது அந்த மரங்களை படம் எடுத்து சென்னை மாநகராட்சி என்ற ஆப்-பில் என புகார் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.
இது தவிர அடையாறு சோழிங்கநல்லூர் பெசன்ட் நகர் வேளச்சேரி மடிப்பாக்கம் மேடப்பாக்கம் இந்த பகுதிகளிலும் கன மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக தரமணி ஏரி நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 10 சென்டிமீட்டர் மழையும், பொன்னேரியில் 9 சென்டிமீட்டர் மழையும், தாம்பரம் அடுத்து 6 சென்டிமீட்டர் மழையும், ஊத்து கோட்டையில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் தொடர் மழையால் இந்த மாவட்டத்தில் 133 இடங்கள் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.இதற்காக 660 தற்காலிக நிவாரண முகாம்களும், 317 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை பாதுகாக்க மாநில பேரிடர் மீட்பு துறையினரிடம் பயிற்சி பெற்ற 5030 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கால்நடைகள் தங்க வைப்பதற்காக இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 42 மருத்துவக் குழுக்களும், 76 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோவை:
அதேபோல் கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியால் கழிவுநீர் உடன் மழை நீரும் சேர்ந்து சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உழவர் நலத்துறை வளாகப் பகுதிகளிலும் மழை நீர் புகுந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பகுதியில் 6.86 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் கணபதி பகுதியில் உள்ள கால்வாய் உடைந்து கழிவு நீரும் வெளியே வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் அப்பகுதிகளில் உள்ள நீரை அகற்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நொய்யல் ஆற்றுப் பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைப் பாளையத்தில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. இந்த தலைப்பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். அதே சமயத்தில் அப்பகுதியை சுற்றி தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}