வெயிலுக்கு குட்டி பிரேக் வருது.. 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

May 07, 2024,06:00 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்த வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் அதிகளவில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் மக்கள் பகல் நேரங்களில் வெயில் வர தயக்கம் காண்பித்து வருகின்றனர். வெயிலை தாங்கிக் கொண்டு வெளியில் வரும் பொதுமக்கள் பல விதமான உடல் உபாதைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  கடும் வெயில் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.




அக்னி நட்சத்திரத்திற்கு முன்னரே வெயில் கடுமையாக இருந்த நிலையில், தற்போது அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பித்துள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், கடும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களையும், பூமியையும் வர்ண பகவான் குளிர்வித்து வருகின்றார்.


இந்நிலையில், வெயிலின் தாக்கம் சற்று குறைவதுடன் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால்  பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும், பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது. 


ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 43.2 டிகிரி செல்சியஸ், திருச்சி விமான நிலையம் 42.7 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையம் 42. 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


வேலூரில் 42.6, திருத்தணி 41.6, திருப்பத்தூர் 41.4, பாளையங்கோட்டை 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 39.1, நுங்கம்பாக்கத்தில் 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 


நாளை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை எதிர்பார்க்கலாம்.


ஒன்பதாம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12ஆம் தேதி  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .


தமிழ்நாட்டில் 11 ஆம் தேதிக்குப் பிறகு நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையானது இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறைய கூடும். ஏழாம் தேதி முதல் பதினோராம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்