வெளுத்து வாங்கிய கன மழை.. வெள்ளக்காடான ஆந்திரா, தெலங்காானா.. மிதக்கும் நகரங்கள்.. ரெட் அலர்ட்

Sep 02, 2024,11:05 AM IST

ஹைதராபாத்:  ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மிக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


வங்காள விரிகுடா கடலின் மேற்கு மத்திய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கம்மம், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வரலாறு காணாத பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் கம்ம்ம் மாவட்டத்தில் இதுவரை 52 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 


இதன் எதிரொலியாக குடியிருப்பு பகுதிக்குள் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் 110 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் கிருஷ்ணா நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பலத்த மழை காரணமாக ஹைதராபாத் சுற்றியுள்ள நீர்நிலைகளில் முழுவதும் வேகமாக நிரம்பி வருகிறது. புளிச்சந்லா அணையில் இருந்து வினாடிக்கு 6,53,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன.




பேரிடர் மீட்பு குழு: 


மழையால் கடும் சேதத்தை சந்தித்த கம்மம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்னை, விசாகப்பட்டினம், மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தலா மூன்று பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.


15 ரயில் சேவைகள் ரத்து:


ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னைக்கு வரும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் நாளை இரவு புறப்படும் அகமதாபாத் டூ சென்னை சென்ட்ரல் நவஜீவன் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் டூ ஷாலிமர் கோரமண்டல் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் செப்டம்பர் 6 தேதி மைசூரில் இருந்து ஹவுராக்கு செல்லும் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதனால் விஜயவாடா மற்றும் காசிபேட் இடையே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் 15 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  ஆந்திரா தெலங்கானாவில் மொத்தமாக 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


தெலுங்கானாவில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு:


இந்த நிலையில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தெலுங்கானாவில் அதிலாபாத் நிஷாமாபாத், கமாரெட்டி, மகபூபாபாத் நாராயணபேட்டை  உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அப்பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதேசமயம் கனமழை காரணமாக தெலுங்கானாவில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்