சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த நான்கு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தவிர கேரளாவில் இன்றும், நாளையும் மிக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாம். நாளை மறுநாள் மிக கனமழைக்கும், அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
கர்நாடகாவை பொறுத்தவரை, இன்று முதல் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தமிழ்நாடு முழுவதும் நல்ல மழையை பொழிவித்து வருகிறது. நாளை தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மே 24ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் வட கிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிசா பகுதியில் நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாகவும், மே 25ஆம் தேதி தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக மே 23 மற்றும் 24 தேதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன முதல் மிக கனமழை கொட்டி தீர்த்ததுள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை வெளுத்து வாங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் புது சத்திரத்தில் 16 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
நாமக்கல் நகரில் 12 சென்டிமீட்டர் மழையும், சேந்தமங்கலம் 10.5 சென்டிமீட்டர் மழையும், ராசிபுரத்தில் 10.3 சென்டிமீட்டர் மழையும் பதிவானது. எருமப்பட்டியில் 7.4 செமீ, குமாரபாளையத்தில் 6.5 செமீ , திருச்செங்கோட்டில் 5 சென்டிமீட்டர் மழை மங்களபுரத்தில் 3.7 சென்டிமீட்டர் மழை பதிவானது.
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு
2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?
நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!
ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!
உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!
மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்
TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!
Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்
{{comments.comment}}