மக்களே கவனம்.. தென் மாவட்டங்கள், காவிரி டெல்டாவில் நாளையும்  கனமழை நீடிக்குமாம்..!

Nov 09, 2023,06:10 PM IST


சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளையும்  கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.


தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சியால், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும் காற்றின் திசையால் உருவான மேகக் கூட்டத்தின் காரணமாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று மிக கனமழை மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.




கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை ,விருதுநகர் , தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.


இதேபோல நாளையும் தென் மாவட்டங்களில்  கனமழை  தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கும் நாளை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமான மற்றும் கன மழை பெய்து வருவதால் வடகிழக்குப் பருவ மழையின் பற்றாக்குறை விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தமிழ்நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உபரி மழைப்பொழிவு கிடைத்துள்ளது. வட தமிழ்நாட்டில்தான் பற்றாக்குறை மழை தொடர்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்