சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், இன்று 3 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
3 மாவட்டங்களில் மிக மிக கனமழை:
தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது .இதனால் இப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். தாழ்வாழ பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மிக கனமழை:
திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் இம்முறை அப்படி நேர்ந்து விடாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எடுத்து வருகின்றனர்.
11 மாவட்டங்களில் கனமழை:
தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ஆகிய 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை (மே 17) மிக கனமழை:
குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை:
விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மே 18 மிக கனமழை:
கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி, ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை:
திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,ஆகிய 20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 19 மிக கனமழை:
தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை:
திருப்பத்தூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர், ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
Most Expensive player in IPL history.. டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. வாங்கியது சென்னைஅணி!
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
{{comments.comment}}