சென்னை: தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை அநேக இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தாலும் மாலை இரவு நேரங்களில் நல்ல கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் இதமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே வடக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் அக்டோபர் 9ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை:
புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
நாளை கனமழை:
ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர்,நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை, ஆகிய 22 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கன மழை:
கடலூர், அரியலூர், பெரம்பலூர்,திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, ஆகிய 14 மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 8:
வேலூர்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, கோவை, திண்டுக்கல், தேனி, ஆகிய 14 மாவட்டங்களில் அக்டோபர் எட்டாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 9:
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி,ஆகிய 11 மாவட்டங்களில் அக்டோபர் 9ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}