டெல்லியில் கடும் பனிமூட்டம்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Jan 04, 2025,11:17 AM IST

டெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பகலில் கூட வாகனங்களை கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.


கடந்த சில நாட்களாக வட இந்தியா முழுவதும் பரவலாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடும்பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் அதிகளவில் உருகி வருவதினால், இதன் தாக்கம் டெல்லியில் எதிரொலித்துள்ளது. அத்துடன் பனிபொழிவுடன் காற்றும் அதிகமாக இருப்பதினால்  குளிரின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இந்தாண்டு உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.




காலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக இருப்பதினால், மக்கள் பனியை தாங்க முடியாமல் ஆங்காங்கே நெருப்பை மூட்டி குளிரை தனித்து வருகின்றனர். இந்த பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் மற்றும் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ள பயணிகள் மிகவும் பாதிப்புக்களாகி வருகின்றனர்.


இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடுமையாகன பனிபொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து இன்றும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக நகரின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி என்ற அளவில் இருக்கிறது. குறைந்த பட்ச வெப்பநிலையாக 8 டிகிரி முதல் 7 டிகிரியாகவும், அதற்கும் கீழும் செல்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்