இந்தியா முழுவதும் வெப்ப அலை அதிகரிப்பு... மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

Apr 20, 2023,09:24 AM IST
டெல்லி: இந்தியாவில் வெப்ப அலை வீச்சு அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மக்கள் உரிய வெப்பத் தவிர்ப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிப்புகளிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கோடை காலம் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. முழுமையான கோடை காலம் இன்னும் தொடங்காத நிலையில் இப்போதே வெப்ப அலை வீச்செல்லாம் தொடங்கி விட்டது.  பல ஊர்களில் 100டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வெளுத்தெடுக்கிறது. 

சமீபத்தில் கூட மகாராஷ்டிராவின் நவி மும்பையில் நடந்த ஒரு அரசு விழாவின்போது கடும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோருக்கு ஹீட் வேவ் தாக்கி உடல் நல பாதிப்புகளும் ஏற்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை வெயில் இப்போதே அதிகரித்துக் காணப்படுவது மக்களை  சோர்வடைய வைத்துள்ளது.



காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளே இதெல்லாம். அடிக்கடி இனி இந்தியாவை இதுபோன்ற வெப்ப அலைகள் தாக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது நாட்டின் 90 சதவீத பகுதியில் வெப்ப அலை வீச்சு இருப்பதாகவும், அதன் தாக்கம் மக்களிடையே தெரிவதாகவும்,  நிபுணர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரமித் தேப்நாத் மற்றும் அவரது குழுவினர் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.  அதில், இந்தியாவின் 90 சதவீத பகுதிகளில் அபாயகரமான அளவுக்கு வெப்ப அலைவீச்சு இருக்கிறது. இதன் தாக்கத்தை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.  குறிப்பாக டெல்லியில்தான் அதிக அளவிலான தாக்கம் தென்படுகிறது. டெல்லி மாநிலம் வெப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்ள எடுத்த நடவடிக்கைகள் உரிய பலனைத் தரவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடைகாலம். இந்த சமயத்தில் குறிப்பாக ஏப்ரலுக்கு மேல் மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும். ஆனால் தற்போது ஏப்ரல் தொடக்கத்திலிருந்தே அனலடிக்க ஆரம்பித்து விட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மத்திய மற்றும் வட மேற்கு இந்தியாவிலும், ஆந்திராவின் கடலோரப் பகுதி, ஒடிஷாவிலும் வெப்ப அலை வீச்சு பொதுவாக அதிகம் இருக்கும். ஆனால் இந்த முறை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீச்சு இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்ப அலைவீச்சுக்கு 17,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது. தற்போதைய வெப்ப அலைவீச்சிலிருந்து தப்ப உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையில்லாமல் பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை குறைக்க வேண்டும். வெயிலில்  நீண்ட தூர பிரயாணத்தையும் தவிர்க்க வேண்டும். இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் அருந்த வேண்டும். டீ காபி போன்றவற்றைத் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்