2 நாட்களுக்கு நாடு முழுவதும் வெப்ப அலை வீசும்...வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

May 01, 2024,11:22 AM IST

டில்லி :  கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோடை வெயிலின் தாக்கல் தினசரி உக்கிரம் அடைந்து வருகிறது. பல நகரில் தினசரி வெப்பநிலையே 100 டிகிரியை தாண்டி காணப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலை தான். இதனால் பொது மக்கள் கவனமாக இருக்கும் படி இந்திய வானிலை மையமும், அரசு துறைகளும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.




இந்நிலையில் இன்றும் நாளையும் நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதோடு மேற்கு வங்கம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. மக்கள் அதிகமான தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


வட தமிழகத்தின் உள் மாவட்டங்களி அடுத்த 4 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்றும், மற்ற மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்