சென்னை: சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயம் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வெயிலின் தலைநகரமான மதுரை
குறிப்பாக தென் மாவட்டங்களில் வெயிலில் தாக்கம் அதிகரித்து வருவதால் அனல் காற்று அதிகளவு வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் . சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரி தாண்டி கொளுத்தது. மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து அதீத வெயில் அளவு மதுரையில் பதிவாகி வருவதால் மதுரை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முன்னதாக சென்னையில் பகலில் வெயில் சுட்டெரித்தாலும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பட்டினப்பாக்கம், அடையாறு, மந்தவெளி, மயிலாப்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் திடீரென சென்னையில் நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்தது. சென்னை சோழிங்க நல்லூரில் அதிகபட்சமாக 8.1 சென்டிமீட்டர் மழையும், தாம்பரத்தில் 5.3 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
வடக்கில் மழை தொடரும்
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகாலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் வெப்பம் குறைய கூடும். வட தமிழகத்தை தவிர மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடரும்.அப்போது இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் சார் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்தில்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரம் 23ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?: டாக்டர் தமிழிசை
Deepavali special.. மொறுமொறுன்னு.. சாப்பிட்டா விறுவிறுன்னு.. ரிப்பன் பூண்டு பக்கோடா!
தமிழ்நாட்டில் மழை.. தீபாவளியன்னிக்கு யாருக்கெல்லாம் கன மழை காத்திருக்கு.. லிஸ்ட்டைப் பாருங்க!
முத்திரை பதித்த பேரரசர்.. அரசியலின் முக்கிய அடையாளம்.. பசும்பொன் தேவருக்கு விஜய் புகழாரம்
டக்குன்னு அஜீத் பக்கம் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்.. கடகடவென பாலோ செய்த அமைச்சர்கள்!
Chennai Rains.. அண்ணாநகரை வச்சு செஞ்ச மழை.. 1 மணி நேரத்தில் 100 மி.மீ.. இது லிஸ்ட்லேயே இல்லையே!
Deepavali special sweet: செம டேஸ்ட்டு.. சூப்பர் ஸ்வீட்டு.. தீபாவளிக்கு முந்திரி கேக் செய்யலாமா?
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}