வாழை மரத்தில் எந்த ஒரு பொருள்களும் பயனற்று இருந்ததில்லை. ஏனெனில் வாழை மரத்தின் இலை, பூ, காய், கனி, தண்டு, மட்டை போன்ற அனைத்தும் இயற்கையாகவே அதிக மருத்துவ குணங்களை கொண்டவை. அதிலும் குறிப்பாக வாழைப்பூவில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் E, போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்து உள்ளன.
இதில் இரும்புச் சத்து மட்டும் அதிக அளவில் உள்ளது. இதனால்தான் இந்த வாழைப்பூ ஹீமோகுளோபின் குறைபாட்டை தடுக்கிறது. வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு தன்மை பெண்களின் மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்றவற்றை நீக்கும் சிறந்த நிவாரணியும் ஆகும்.
சரி. ஏன் இப்ப வாழைப்பூ பற்றி பேசறோம்னு பார்க்கிறீர்களா. பசங்க சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்ததும் ஏதாவது சாப்பிட கேப்பாங்க. அப்ப அவங்க சாப்பிடுற ஸ்னாக்ஸ புல்ஃபில் பண்ற மாதிரி இருக்கணும் இல்லையா.. கூடவே சத்தாகவும், வித்தியாசமாவும் செய்து கொடுத்தால்.. இன்னும் ஹேப்பியா சாப்பிடுவாங்கள்ள.. அதான்.. சத்தான சுவையான வித்தியாசமான வாழைப்பூ பக்கோடா பத்தி உங்க கிட்ட சொல்லப் போறோம்.
யாருக்கெல்லாம் பக்கோடா சாப்பிட ரொம்ப பிடிக்கும்.. யாருக்குத்தான் பிடிக்காது.. அதிலும் ஒரே மாதிரியான பக்கோடாவை சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா. அப்ப இப்ப சொல்ற வித்தியாசமான வாழைப்பூ பக்கோடாவை சாப்பிட்டு பாருங்க. சுவையாகவும் இருக்கும்.. சத்து மிக்க வாழைப்பூ பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ-1
வெங்காயம்-2
கருவேப்பிலை, கொத்தமல்லி
கடலை மாவு- ஒரு கப் அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு -ஒரு டீஸ்பூன் இஞ்சி -ஒரு சிறிய துண்டு
மஞ்சள் தூள்-சிறிதளவு
பூண்டு-5 பல்
பச்சை மிளகாய்- நான்கு
உப்பு,எண்ணெய்- தேவையான அளவு
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மறுபுறம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூவுடன் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மல்லி, அரைத்த விழுது, கடலை மாவு அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், சூடாக காய்ச்சிய ஒரு கரண்டி எண்ணெய் போன்றவற்றை போட்டு நன்றாக கிளறி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதில் இரும்பு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வாழைப்பூ பக்கோடா கலவையை சிறிதாக சிறிதாக கிள்ளி போடவும். பின்னர் சூடான, மொறு மொறுப்பான வாழைப்பூ பக்கோடா தயார். செஞ்சு சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க பிரண்ட்ஸ்..!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}