மொறு மொறு ராகி தோசை.. தொட்டுக்க வேர்க்கடலை சட்னி.. கொஞ்சம் இளையராஜா பாட்டு.. சொர்க்கம்ங்க!

Feb 15, 2024,08:37 PM IST

சென்னை: குட் ஆப்டர்நூன் ஃப்ரெண்ட்ஸ்..  என்னடா இன்னைக்கு லேட்டா வர்றேன்னுபாக்குறீங்களா..  ஸாரிங்க, லேட்டா வந்தாலும் ரகளையான ரெசிப்பியுடன்தான் வந்திருக்கேன்.


இன்னைக்கு சொல்ல போற ரெசிபி ஒரு பிரேக்பாஸ்ட் காம்போ. எப்பவுமே காலை உணவு எடுத்துக்கிறது ரொம்ப முக்கியம். சில பேர் எல்லாம் பிரேக்ஃபாஸ்ட்ட ஸ்கிப் பண்ணிட்டு டைரக்டா லன்ச் தான் சாப்பிடுவாங்க. அப்படி சாப்பிடுவது நம்ம உடம்புக்கு நல்லது இல்லைங்க. காலையில ஹெல்த்தி ஃபுட் எடுத்துகிட்டா நம்ம ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லதுங்க. இன்னைக்கு அப்படி ஒரு ஹெல்த்தியான தோசையும் அது கூட தொட்டுக்க ஹெல்தியான சட்னி ரெசிபியும் தான் பார்க்க போறோம்.


அது என்னன்னா ராகி தோசை + வேர்க்கடலை சட்னியும் தாங்க. ராகில ஏகப்பட்ட நன்மைகள் இருக்குங்க. கால்சியம் இரும்புச்சத்து, புரதச்சத்து, நார் சத்துக்கள் நிரம்பி இருக்குங்க. ராகி தோசை செய்ய என்ன பொருட்கள் தேவை எப்படி பண்ணலாம்னு முதல்ல பாப்போமா!




தேவையான பொருட்கள்


ராகி மாவு-1  கப்

ரவை -1/4 கப்

அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்

தயிர் -1/4 கப்

உப்பு -தேவைகேற்ப

பச்சை மிளகாய்- 2

சின்ன வெங்காயம்- 10

கறிவேப்பிலை- சிறிதளவு

எண்ணெய்-2  ஸ்பூன்


செய்முறை: முதலில் ஒரு மிக்ஸிங் பௌலில் ராகி மாவு, ரவை, அரிசி மாவு, தயிர் கலந்து தேவையான உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி ஊறிய மாவில் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.


பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து மிதமான தீயில் தோசை வார்த்து இரண்டு புறமும் நன்றாக வெந்தபின் எடுத்தால் நல்ல மணமான மொறு மொறு ராகி தோசை தயார்.


தோசைக்கு பல சட்னி வகைகள் இருக்குங்க. இந்த ராகி தோசைக்கு, வேர்க்கடலை சட்னி செஞ்சு பாருங்க ஃபிரண்ட்ஸ். ரொம்ப ஆஃப்ட்டா இருக்கும். பீனட் சட்னின்னு சொல்றத விட ப்ரோட்டின் சட்னின்னு சொல்லலாம். அவ்ளோ பெனிபிட்ஸ்ங்க. சரி, சட்னி அரைக்க தேவையான பொருட்கள் என்னன்னு பாக்கலாமா!


வேர்க்கடலை சட்னிக்குத் தேவையான பொருட்கள்




வேர்க்கடலை -1 கப்

காய்ந்த மிளகாய்- 4

மல்லி (தனியா) -1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 7 

சீரகம் -1 ஸ்பூன்

பூண்டு-4 பல்

புளி- சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய்-1 ஸ்பூன்


செய்முறை: முதலில் ஒரு வாணலியில் வேர்க்கடலையை போட்டு மிதமான தீயில் நன்கு வறுக்கவும். (ட்ரை ரோஸ்ட்) பின்னர் வறுத்த வேர்க்கடலையை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். அதே வாணலியில் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து வர மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், வர மல்லி, சீரகம், புளி சேர்த்து வதக்கவும். பின்னர் வேர்க்கடலையை தோல் நீக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருள்களுடன் தேவையான உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் வேர்க்கடலை சட்னி ரெடியாயிடும். 


தாளிக்க தேவையில்லை, வேண்டுமென்றால் கடுகு உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.  அப்புறம் என்னங்க.. இந்த காம்போ டிஷ்ஷை உடனே ட்ரை பண்ணி ஹெல்தியா சாப்பிடுங்க பிரண்ட்ஸ்!


புகைப்படம்: செளந்தரபாண்டியன்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்