சென்னை: என்ன பிரண்ட்ஸ் என்ன பண்றீங்க.. இங்க மழை வர்ற மாதிரியே இருக்கு.. உங்க ஊர்ல எப்படி நிலவரம்... நாளைக்கு காலைல என்ன சட்னி அரைக்கலாம்னு, என்ன டிபன் செய்யலாம்னு இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிட்டிருப்பாங்க பலரும். இட்லி, தோசை போன்ற பெரும்பாலான டிபன் வெரைட்டிகளுக்கு நம்ம பலவிதமான சட்னி வச்சு சாப்பிடுவோம். தக்காளி சட்னி, வெங்காய சட்னி, பூண்டு சட்னி, தேங்காய் சட்னி என ஏகப்பட்ட சட்னி வெரைட்டீஸ் இருக்குங்க.
எப்பப் பார்த்தாலும் இதேதானா என்று பலருக்கு அது அலுப்பாகவும், சலிப்பாகவும் மாறி விடுகிறது. அந்த சலிப்பிலிருந்து சற்றே விடுதலை பெறத்தான், வித்தியாசமாகன அதேசமயம் ஆரோக்கியமாகவும் இருக்கிற சட்னி ரெசிபி தான் இன்னைக்கு உங்களுக்கு சொல்ல போறோம். அது என்னன்னா, பீட்ரூட் சட்னி தாங்க. என்னது, பீட்ரூட்ல வச்சு சட்னி செய்யலாமா என்று தானே யோசிக்கிறீங்க. செய்யலாங்க, ரொம்பவும் நல்லா இருக்கும். ஹெல்த்தியும் கூட.
மலிவு வேலையில் கிடைக்கிற பீட்ரூட் தானே... இதுல என்ன இருக்கு.. வெறும் கலர் தான் இருக்கு.. இதுல என்ன சத்து இருக்குன்னு குறைச்சு நினைச்சுடாதீங்க.. பீட்ரூட்ல ஏகப்பட்ட நன்மைகள் இருக்குங்க. அது என்னன்னு ஃபர்ஸ்ட் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் சட்னி ரெசிபி பார்க்கலாங்க.
பீட்ரூட்ல விட்டமின் பி1 மற்றும் இரும்பு சத்து இருக்கிறதால நம் உடம்பில் உள்ள ரத்த சிவப்பணுக்களுடைய எண்ணிக்கை அதிகரிக்க உதவுதுங்க. மேலும் முகச் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுது. நம்ம உடம்புல ரத்த ஓட்டம் அதிகரிக்க செய்கிறது. அல்சர் போன்ற பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இப்படி பீட்ரூட்டின் நன்மைகளை சொல்லிக்கிட்டே போகலாம். இப்ப டயட் இருக்கிற பல பேரும் abc ஜூஸ் அதாவது ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்து ஜூஸ் தான் காலையில உணவு எடுத்துக்கிறாங்க. அவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த பீட்ரூட் வச்சு சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் -2 (துருவியது)
தனியா - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 10
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிதளவு
தேங்காய் துருவியது - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் கருவேப்பிலை, பூண்டு போட்டு நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கியபின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும். பிறகு வேறு ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட்டை போட்டு நன்றாக அதன் நீர்வற்றும் வரை வதக்கவும். வதக்கிய அனைத்து பொருட்களுடன் புளி சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்தால் பீட்ரூட் சட்னி தயார்.
இது சாதத்தோடு பிசைந்து சாப்பிட அவ்வளவு நன்றாக இருக்கும். மேலும் இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு ஒரு இனிப்பு, காரம், புளிப்பு சேர்ந்து டேங்கியான சட்னியாக இருக்கும். அதனால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். டெய்லி என்ன சட்னி அரைக்கிறது? என்ன குழம்பு வைக்கிறதுன்னு யோசிக்காம இப்படி வித்தியாசமாவும் ஆரோக்கியமாகவும் செஞ்சு கொடுத்தா வீட்ல இருக்கவங்க எல்லாரும் ஹேப்பியா இருப்பாங்க, நீங்களும் ஹேப்பியா இருப்பீங்க!
ஓகேங்க.. இன்னொரு ரெசிபியுடன் பிறகு வரேன்.. பை!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}