சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள 137 விமான நிலையங்களை இந்த விமான நிலைய ஆணையமே நிர்வகித்து வருகிறது. இதில் பணி புரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு காலியாக உள்ள 309 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இங்கு பணி புரிய பி.எஸ்.சி, இயற்பியல், கணிதம் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் என்ஜினியரிங் பட்டம் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் எழுத மற்றும் பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளுக்கும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் வயது தளர்வுகள் உண்டு. அது மட்டும் இன்றி பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும், எஸ்சி பிரிவினர் என்றால் 15 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
ஜூனியர் எக்ஸியூட்டிவ் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கான தேர்வுகுள் கணிணி வாயிலாக நடத்தப்படும். அதன்பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு, குரல் பரிசோதனை, மனோவியல் சோதனை, உளவியல் மதிப்பீடு, உடல் மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்படும்.
இத்தேர்விற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்டி, எஸ்சி, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரருக்கு கட்டணம் கிடையாது. இந்த தேர்விற்கு மே 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.aai.aero என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சையத் ஆதில் ஹுசைன் ஷா.. மக்களைக் காக்க தீவிரவாதியுடன் மோதி.. உயிர் நீத்த குதிரைப்பாகன்!
தமிழக அரசுக்கும்.. ஆளுநர் ஆர் என் ரவிக்கும் மோதல் இல்லை.. ஆளுநர் மாளிகை விளக்கம்
பஹல்காம் தாக்குதலுக்கு விரைவில் சரியான பதிலடி தரப்படும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்
பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்.. உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி..!
டிகிரி முடிச்சிருக்கீங்களா?... ஏர்போர்ட்டில் வேலை இருக்கு... மே 24 வரை விண்ணப்பிக்கலாம்!
இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது..?காஷ்மீர் தாக்குதலுக்கு சீமான் கண்டனம்..!
குஜராத்தில் மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த சூப்பர் மாமனார்!
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு.. மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!
{{comments.comment}}