ராதா மகள் கார்த்திகா விரலில் ஜொலிக்குதே மோதிரம்.. அப்படீன்னா கல்யாணமா?

Oct 20, 2023,05:06 PM IST
- மீனா

சென்னை: பழம்பெரும் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக செய்திகள் பரவுகின்றன. இதற்குக் காரணம் கார்த்திகா போட்ட ஒரு அட்டகாசமான போட்டோதான்.

ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் ,மோகன் போன்ற நடிகர்களுடன் 80களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராதா. அலைகள் ஓய்வதில்லை மூலம் நடிக்க வந்த கேரளத்து ராதாவுக்கு அந்தப் படத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்தே ஓய்வே இல்லை.. அந்த அளவுக்கு பிசியாக நடித்து வந்தார்.

சிவாஜி கணேசனுடனும் நடித்துள்ளார், எஸ்பிபியுடனும் நடித்துள்ளார். மூத்த நடிகர்கள் மற்றும் சம கால நடிகர்களுடன் நடித்து தமிழ்த் திரையுலகைக் கலக்கியவர் தான் ராதா.



நடிகை ராதா திருமணத்திற்கு பிறகு தன் இரண்டு மகள் மற்றும் ஒரு மகனுடன் கேரளாவில் வசித்து வருகிறார். தற்போது ராதாவின் மூத்த மகளான கார்த்திகாவிற்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளதாக அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் தெரியப்படுத்துகிறது. நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா தமிழில் கே. வி ஆனந்த் இயக்கி ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள படத்தில் கதாநாயகியாக கார்த்திகா "கோ" படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பாரதிராஜா  இயக்கிய "அன்னக்கொடி" என்ற படத்திலும்  நடித்துள்ளார். அதுமட்டுமல்லது விஜய் சேதுபதியோடு "புறம்போக்கு "என்ற படத்திலும் நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், கோ படத்திற்கு பின்பு அவருடைய படங்கள்  எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததினால் சரியான பட வாய்ப்பு அமையாமல் இந்தி சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.  ஆனாலும் தன்னுடைய குடும்பத் தொழிலான  அப்பாவின் பிசினஸ் ஆன ஹோட்டல் மற்றும்  ரிசார்ட்டை அப்பாவுடன் சேர்ந்து மேனேஜ் பண்ணுவதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். 



கேரள அரசின் சிறந்த தொழிலதிபருக்கான விருதினை அண்மையில் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை கார்த்திகா தன்னுடைய சோசியல்  மீடியாவில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்தபடி உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும்போது சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் என்று  அனுமானிக்க முடிகிறது. ஆனால், அவர் தன்னுடைய வருங்கால கணவர் யார் என்பதனை தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்துள்ளார். 

விரைவில் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய   நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அறிவிக்காவிட்டாலும் கூட ராதா இதுகுறித்துப் பேசுவார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்