அரியானா சட்டசபை தேர்தல் 2024...விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு...வெற்றி யாருக்கு?

Oct 05, 2024,12:57 PM IST

டில்லி :   அரியானா மாநிலத்தின் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இதில் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வருவதால் வெற்றி யாருக்கு, ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.


அரியானா மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 90 இடங்களுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்து வருகிறது. மொத்தம் 20,632 ஓட்டுச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. 2,03,54,350 வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1.07 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 95 லட்சம். மூன்றாம் பாலினத்தவர்கள் 467 பேர். இவர்களில் 8821 வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதிவாகும் ஓட்டுக்கள் அக்டோபர் 08ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.




2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அரியானா சட்டசபை தேர்தலில் பாஜக, ஜனநாய ஜனதா கட்சியுடன் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்தது. தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் அரியானாவில் மவோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வருகிறார். இந்த முறையும் அரியானா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் இந்த முறையும் பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்குமா? அல்லது 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? அடுத்த முதல்வர் யார் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.


கடந்த முறை பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.  பாஜக இந்த முறை 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்து வந்தாலும், அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றோ அக்கட்சி கூறி வருகிறது. அதே போல், மக்கள் 10 ஆண்டுகளாக ஊழல் ஆட்சியை கண்டு சோர்வடைந்து விட்டார்கள். விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாஜக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முறை தங்கள் கட்சி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் காங்கிரசும் தீவிரமாக நம்பிக்கை தெரிவித்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

அதிகம் பார்க்கும் செய்திகள்