சென்னை: காதலை யாரடி முதலில் சொல்வது நீயா.. இல்லை நானா.. இந்தப் பாடல் வரிகளுக்கேற்ப காதல் வாழ்க்கையில் போட்டி இல்லாமல் சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் காதலை கொண்டாடும் அழகான தருணம் இன்று!
ஒவ்வொரு வருடமும், காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர்களால் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ரோஸ் டேவில் தொடங்கி, ப்ரபோஸ் டே, சாக்லேட் டே,டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, இறுதியாக காதலர் தினம் வரை காதலர்கள் அன்பானவர்களுடன் கொண்டாடி மகிழ்வர். அந்த வகையில் அன்பானவர்கள் இருவரும் காதலை கொண்டாடும் தினம் இன்று!
இந்த உலகத்தில் மனிதருக்கு மட்டுமல்ல உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் காதல் உண்டு. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வரக்கூடியது தான் காதல். அந்த காதலை கொண்டாடும் அழகான தருணம் இன்று!
காதல் இல்லாமல் இந்த பூமியில் ஒரு அணுவும் இயங்காது. பூக்கள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள், மனிதர்கள் என எல்லாவற்றிலும் காதல் உண்டு.குறிப்பாகஆணுக்கும், பெண்ணுக்கும், இடையே உள்ள காதல் என்பது நகமும் சதையும் போன்றது. ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும். அதேபோல் காதலர்களின் இரு மனங்களின் உணர்வுகளும் ஒன்றிணைந்தே இருக்கும். அப்போது தான் காதலர்களாகவே வாழ முடியும்.
இந்தக் கலியுகத்தில் மனிதன் பல யுக்திகளையும், தந்திரங்களையும், கற்றுத் தேர்கிறான். ஆனால் கற்காமல் அனைவரிடமும் சுலபமாக வரக்கூடிய விஷயம் காதல் மட்டுமே. அப்படிப்பட்ட காதல், அன்பு,நேசம், பாசம், விட்டுக் கொடுத்தல் போன்ற காதல் உணர்வுகளில் அடிபணியாதவர்கள் எவரும் இல்லை. காதல் வயப்படாதவர்களும் எவரும் இல்லை. கற்காலம் முதல் தற்போது வரை காதல் ஒன்று மட்டுமே மாறாமல் உள்ளது. ஏனென்றால் காதல் என்பது உண்மையானது. அது என்றும் அழியாது.
ஒவ்வொருவருடைய வாழ்நாளில் ஒரு ஆண் வெவ்வேறு சூழ்நிலைகளில் பல பெண்களை சந்திக்கிறான். அவன் சந்திக்கும் அனைத்து பெண்களையும் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நம் மனம் கவர்ந்த ஒருவரை மட்டுமே நம் வாழ்க்கை துணையாக எண்ணி அவர்களை காதலிக்க ஆரம்பிப்போம். பெண்களுக்கும் அப்படித்தான். அப்படிப்பட்ட காதலை வெளிப்படுத்தும் அழகான தருணம் காதலர் தினம்.
அழகான காதல் தினத்தில் அன்பானவர்கள் இருவரும் தங்களுக்குள் காதல் பரிசுகள் கொடுத்து பரிமாறுவது வழக்கம். இந்த காதலர் தினத்தில் உங்கள் காதலிக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள் என்பதை யோசித்து செய்யுங்கள். ஏன் என்றால் காதலன் காதலிக்கோ, காதலி காதலனுக்கோ கொடுக்கப் போகும் அந்த பரிசு மிகவும் ஸ்பெஷல் ஆனது. அதற்கு அதிக எதிர்பார்ப்பும் நிலவும்.
காதலில் மிக உயர்ந்த பொருட்களை பரிசாக வழங்க வேண்டும் என்பது அவசியமில்லை. தம்மால் இயன்ற சிறு பொருள்களை கொடுத்தாலும் அது காதலிக்கு பிடித்த மாதிரி கொடுக்க வேண்டும். இந்த காதலர் தினத்தில் ரோஸ், புத்தகம், சாக்லேட், கவிதைகள், டெடி, வாழ்த்து மடல்கள், நினைவுச் சின்னங்கள் போன்ற சின்ன சின்ன, பரிசுகளை வழங்கி உங்கள் காதலியை இம்ப்ரஸ் பண்ணலாம்.
சரி காதலியை இம்ப்ரஸ் எப்படி பண்ணனும் என்று தெரிஞ்சுக்கிட்டீங்க. உங்க காதல் உணர்வுகளை அன்பானவர்களிடம் வெளிப்படுத்தும்போது நீங்கள் என்ன நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா. ஆடை கலர்ல என்ன இருக்கு என்று தானே யோசிக்கிறீங்க. வாங்க சொல்கிறேன்.
சிவப்பு நிறம்: காதல் தொடர்புடைய நினைவுச் சின்னங்கள் அனைத்தும் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று தெரியுமா. ஏன் என்றால் சிவப்பு நிறம் ரொமான்ஸின் சின்னம். அதாவது காதலர்களின் இரு இதயங்களும் சிவப்பாக தான் இருக்கும். அதனால் காதலர் தினம் அன்று சிவப்பு நிற ஆடையை அணிந்து சென்றால் ஏற்கனவே காதலில் உள்ளீர்கள் என்று தான் அர்த்தமாம்.
நீல நிறம்: கடலின் நிறம் நீலம். கடல் அனைத்து வளத்தையும் ஏற்றுக்கொள்ளும். அதுபோல நீலநிற ஆடை அணிந்தால் நான் உங்கள் காதலை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்று அர்த்தமாம்.
பச்சை நிறம்: பசுமை காத்திருப்பின் அடையாளத்தை குறிக்கிறது. பச்சை நிறத்தில் ஆடை அணிந்தால் காதலியிடம் தன் காதலை சொல்லிவிட்ட பிறகு பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று அர்த்தமாம்.
வெள்ளை: அமைதியின் நிறம். எதிர்ப்பு, போராட்டம், பதட்டம் எல்லாம் நீங்கி.. காதலர்கள் திருமண உறவில் ஈடுபட இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்.
ஆரஞ்சு நிறம்: காதலர் தினத்தன்று நீங்கள் உங்கள் காதலியிடம் காதலை சொல்ல விரும்புகிறீர்கள் என்று அர்த்தமாம்.
ஊதா அல்லது சாம்பல் நிறம்: காதலர் தினத்தில் யாரேனும் ஒருவருக்கு காதலில் பிரிவு அல்லது முடிவு ஏற்பட்டால் ஊதா அல்லது சாம்பல் நிறத்தை அணியுங்கள்.
கருப்பு நிறம்: காதலுக்கு எதிர்ப்பு கொண்டு நான் காதலில் ஈடுபட போவதில்லை என்பதை குறிக்குமாம்.
இப்ப தெரிஞ்சுகிட்டீங்களா. என்ன கலர் அணிந்தால் என்ன மாற்றம் நடக்கும் என்று. காதல் தினத்தன்று காதலர்களின் உணர்வுகளை அவர் அணியும் உடைகளே சொல்லிவிடுமாம். காதல் நிற ஆடைகளை அணிவதன் மூலம் நீங்கள் காதலுக்காக காத்திருக்கிறீர்களா அல்லது பிரிந்திருக்கிறார்களா அல்லது இனிமேல் காதலில் சேரப் போகிறீர்களா என்பதை வண்ணங்களே தீர்மானிக்குமாம். அதனால் தான் நீங்கள் காதலர் தினத்தன்று எந்த வண்ண உடை அணிந்து.. என்ன பரிசு வாங்கி கொடுக்கலாம் என்பதை பிளான் பண்ணி உங்க அன்பு காதலிக்கு கொடுத்து காதலர் தினத்தை சக்சஸ் பண்ணுங்க. காதலர் தினத்தன்று உங்களின் எல்லையற்ற காதல் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.
வாழ்த்துக்கள் காதலர்ஸ்!
LIC website.. இது தொழில்நுட்பக் கோளாறில்லை... அரசியல் கோளாறு.. மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!
கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
{{comments.comment}}