சென்னை: முத்துப் பல் சிரிப்பழகி சினேகாவிற்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி "ஹேப்பி பர்த்டே சினேகா கண்ணம்மா" என்று டிவிட்டரில் வாழ்த்தி மகிழ்ந்துள்ளார் அவரது கணவர் நடிகர் பிரசன்னா.
புன்னகையரசி கே.ஆர்.விஜயாவிற்கு பின்னர் அந்த பெருக்கு சொந்தக்காரர் யார் என்றால் அது நம் சிரிப்பழகி சினேகாவையே சேரும் எனலாம். 40 வயதை கடந்தும் இன்றும் இளமையும், புன்னகையும் மாறாத பேரழகியாகவே வலம் வருகிறார்.
மலையாள திரையுலகில் முதன் முதலில் கால்பதித்தவர் சினேகா.. பின்னர் 2001ம் ஆண்டு என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழில் நுழைந்தார். தொடர்ந்து வேகமாக முன்னேறியவர் அடுத்தடுத்து சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து கலக்கினார். சில படங்களில் கவர்ச்சியாக நடித்தலும் பெரும்பாலான படங்களிலில் ஹோம்லியான வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டவர்.
அவரது சிரிப்புக்கும், அவரது பாந்தமான தோற்றத்துக்கும், சேலை கட்டும் அழகுக்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம்.
ஆட்டோகிராப், பள்ளிக்கூடம் போன்ற பாடங்களில் நடித்து வலுவான நாயகி என்ற நற்பெயர் பெற்றவர். ஆட்டோகிராப் திரைப்படத்தில் இவர் பாடிய ஒவ்வொரு பூக்களுமே என்ற சாங் மிகவும் பிரபலமானதுடன் காயம்பட்ட பலரின் மனதிற்கு இந்த பாடலின் மூலம் தனது நடிப்பால் மருந்து போட்டவர் தான் சினேகா.
பவானி ஐபிஎஸ் என்னும் நாயகியை மையப்படுத்திய படத்தில் காவல்துறை அதிகாரியாகவும், பொன்னர் சங்கர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்தார். எல்லா வகையான கேரக்டர்களிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர். திருமணம், குழந்தைகள் என்று பல காரணங்களாக சினேகா நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் மதிப்பு குறையாத நடிகையாகவே இன்றும் வலம் வருகிறார்.
புன்னகை தேசம், பிரிவோம் சந்திப்போம், விரும்புகிறேன் ஆகிய படங்களுக்காகச் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை மூன்று முறையும், தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது., ஆந்திர அரசின் நந்தி சிறப்பு விருது உட்பட பல விருதுகளை பெற்றவர்.
புன்னகையாலேயே பளிச்சென்று மனதில் இடம்பிடித்துவிடும் சினேகா பாந்தமான தோற்றம். கண்ணியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பதால் ஆண் ரசிகளுக்கு இனணயான பெண் ரசிகர்களையும் பெற்றவர் எனலாம். சினேகா போன்ற திறமை வாய்ந்த நடிகைகள் இன்னும் நீண்ட நெடுங்காலம் திரைப் பயணத்தை தொடர வேண்டும். இன்னும் பல தரமான படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து இன்னும் அழுத்தமான தடங்களைப் பதிக்க வேண்டும். இந்தக் கணிப்பு மெய்யாகி ஒரு நடிகையாக சினேகா இன்னும் பல உயரங்களை அடைய அவரை மனதார வாழ்த்துவோம். ஹாப்பி பர்த்டே சினேகா!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}