மார்கழி அமாவாசை 2024 .. துன்பம் போக்கும் அனுமன் ஜெயந்தி.. ஸ்ரீராம ஜெயம் சொல்லுங்கள்

Jan 11, 2024,10:22 AM IST

சென்னை : ராம சேவைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அனுமன் அவதரித்த நாளை நாம் அனுமன் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். 


தைரியம், வீரம், பலம், பக்தி, சேவை, பேச்சாற்றல் இவை அனைத்திற்கும் உதாரணமாக விளங்குபவர் அஞ்சனை மைந்தன் அனுமன். ராம சேவை, ராம பக்தியே உயர்ந்தது, ராம நாமத்திற்கு இணையாவது இந்த உலகில் எதுவும் இல்லை என உலகிற்கு உணர்த்தியவர் அனுமன். ராம காவியத்தில் தவிர்க்க முடியாத ஒரு கதாபாத்திரம். அனுமனை வாயு புத்திரன் என சொன்னாலும் இவர் சிவ பெருமானின் அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறார். அனுமனை வழிபட்டால் சிவனையும், விஷ்ணுவையும் ஒன்றாக வணங்கிய பலன் கிடைக்கும்.




அனுமன் அவதரித்தது மார்கழி மாத அமாவாசை திதியுடன் கூடிய மூலம் நட்சத்திரத்தில் என புராணங்கள் சொல்கின்றன. ஆனால் வடஇந்தியாவில் சித்திரை மாதத்திலேயே அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதே சமயம் ஆந்திராவின் சில பகுதிகளில் வைகாசி மாதத்திலேயே அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்திலேயே அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 11 ம் தேதி வியாழக்கிழமையில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இது இந்த ஆண்டின் முதல் அமாவாசை என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. 


அனுமன் ஜெயந்தி அன்று அனுமன் கோயில், ராமர் கோவில் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். வெண்ணெய் காப்பு, செந்தூரம் சாத்தி வழிபடலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக ஆஞ்சநேயருக்கு பிரியமான அவல், பொரி, வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு உள்ளிட்டவற்றை படைத்து வழிபடலாம். இந்த நாளில் அனுமன் சாலிசா, ஸ்ரீராம ஜெயம் போன்ற மந்திரங்களை படிப்பது மிகவும் சிறப்பு. சுந்தரகாண்டம் படிக்கலாம்.


அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் அனைத்தும் நீங்கி, நன்மைகள் பெருகும். வெற்றிகள் சேரும். நோய்கள் நீங்கும். சனி தோஷம் உள்ளிட்ட கிரக தோஷங்கள் விலகும். தைரியம் பெருகும், பலம் விலகும். மங்கலங்கள் கூடும். திருமண தடைகள் நீங்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்