டெல் அவிவ்: இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது இஸ்ரேலுக்குள் புகுந்து ஒரு பெண்ணைக் கொன்று அவரது நிர்வாண நிலையிலான உடலை ஜீப்பில் வைத்து ஹமாஸ் போராளிகள் எடுத்துச் சென்ற நிலையில், அந்தப் பெண்ணின் அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி அந்த நாட்டை அதிர வைத்துள்ளனர். முதலில் சரமாரியான ராக்கெட் வீச்சை நடத்தி அந்த நாட்டு ராணுவத்தை அதிர வைத்த ஹமாஸ் அமைப்பு பின்னர் அதன் போராளிகளை இஸ்ரேலுக்குள் ஊடுறுவ வைத்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றது. பின்னர் நூற்றுக்கணக்கானோரை அவர்கள் பிணைக் கைதிகளாக காஸா பகுதிக்குள் கொண்டு சென்றனர்.
இப்படி பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் ஏராளமானோர் ராணுவத்தினர் என்று கூறப்படுகிறது. குறிப்பாக முக்கியப் படைப் பிரிவின் கமாண்டர் ஒருவரையும் பிடித்துச் சென்றுள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்று அந்தப் பெண்ணின் உடலை ஆடைகளின்றி ஜீப்பில் போட்டு கொண்டு சென்ற மோசமான காட்சியும் வெளியானது. அந்தப் பெண்ணின் உடலை தலைகுப்புற படுக்க வைத்து காலை உடல் மீது வைத்தபடி ஹமாஸ் போராளிகள் சென்றது அனைவரையும் அதிர வைத்தது.
அந்தப் பெண் இஸ்ரேல் ராணுவ வீராங்கனை என்று ஹமாஸ் கூறியிருந்தது. ஆனால் அந்தப் பெண்ணின் அடையாளம் தற்போது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் ஷானிலோக். 30 வயதாகும் அவர் ஒரு டாட்டூ கலைஞர். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். இஸ்ரேலில் நடந்து வரும் இசை விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார். தனது குழுவினரோடு நிகழ்ச்சிக்குப் போய்க் கொண்டிருந்தபோதுதான் ஹமாஸ் போராளிகளிடம் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.
அவரது காலில் வரையப்பட்டுள்ள டாட்டூவை வைத்துத்தான் அந்தப் பெண் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தனது மகளின் உடலையாவது திரும்பக் கொடுத்து விடும்படி ஹமாஸ் அமைப்புக்கு ஷானியின் தாயார் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்துள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}