மிரள வைக்கும் "Habsora".. இனி வருங்கால போர்கள் இப்படித்தான் இருக்குமா?.. அதிர வைக்கும் இஸ்ரேல்!

Dec 10, 2023,05:49 PM IST

டெல் அவிவ்: ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான இஸ்ரேல் போரில் புதுப் புதுத் தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் மிரள வைப்பதாக உள்ளது. அதாவது செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஹமாஸ் அமைப்பை நிர்மூலமாக்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம் என்பதுதான் அது.


இஸ்ரேல் ராணுவம் உருவாக்கியுள்ள  செயற்கை நுன்னணறிவு போர்த் திட்டம் மிரள வைப்பதாக உள்ளது. இந்த உத்திக்கு ஹப்ஸோரா என்று பெயரிட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். ஹப்ஸோரா என்றால் ஹீப்ரு மொழியில் "நற்செய்தி" என்று அர்த்தமாம். அதாவது இந்த போர் உத்தியானது இஸ்ரேலுக்கு நற்செய்தி.. ஆனால் உலகம் முழுமைக்கும் ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி செய்தியாக வந்தமைந்துள்ளது.




இந்தப் புதிய உத்தியைப் பயன்படுத்தித்தான் ஹமாஸ் போராளிகளை ஒடுக்கிக் கொண்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் துல்லியமாக எதிரிகளின் இலக்கை தாக்க முடியும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.


கடந்த வாரம்தான் இதுகுறித்து தகவல்கள் வெல்ல வெளியாகத் தொடங்கின. இஸ்ரேலின் தாக்குதல் மிகவும் உக்கிரமாகவும், துல்லியமாகவும் இருப்பதும் பலரை யோசிக்க வைத்திருந்தது. ஆனால் தற்போதுதான் இஸ்ரேல் கடைப்பிடிக்கும் உத்தி குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 


காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருக்கும் இடங்கள், பங்கர்கள், எந்த இடத்தில் தாக்கினால் துல்லியமாக இருக்கும்.. குண்டு வீசினால் எத்தனை பேர் இறப்பார்கள் என்பது வரை முன்கூட்டியே திட்டமிட இந்த "ஹப்ஸோரா" உத்தி பயன்படுகிறதாம். இதனால்தான் மிகத் துல்லியமாக இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.




இஸ்ரேலின் இந்த அதி நவீன தொழில்நுட்ப போர் உத்தியானது, இனி நடக்கப் போகும் உலகப் போர்கள் எல்லாம் இப்படித்தான் டெக்னாலஜியை நம்பி இருக்கும் என்று தோன்றுகிறது. பல்வேறு வல்லரசு நாட்டு ராணுவங்கள் அதி நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன. ஆனால் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பம், வீரர்களின் திறமை மேம்படுத்துகிறது அதை விட முக்கியமாக தாக்குதலை துல்லியமாக்குகிறது. வேகத்தையுமம் இது கூட்டுகிறது. தாக்குதலின் வீரியத்தையும் அதிகரிக்கிறது. 


இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக எத்தனை தூரத்தில் இருந்து கொண்டும் கூட மிகத் துல்லியமாக நாம் நினைக்கும் டார்கெட்டை தாக்கி அழிக்க முடியும். அதற்குத் தேவையான அத்தனை முக்கியமான தகவல்களையும் இந்த "ஏஐ" தொழில்நுட்பம் மூலம் நாம் சேகரிக்க முடியும். அதைத்தான் இஸ்ரேல் ராணுவம் செய்து வருகிறது.


ஒரு வீடு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.. அந்த வீட்டில் யார் இருக்கிறார்.. எத்தனை பேர் இருக்கிறார்கள்.. அங்கு என்ன பொருட்கள் எல்லாம் இருக்கிறது.. அதில் அபாயகரமான பொருட்கள் இருக்கிறதா.. அந்த வீட்டின் தன்மை என்ன.. அதைச் சுற்றியுள்ள பகுதியின் சூழல் என்ன.. எத்தனை கட்டடங்கள் உள்ளன.. இந்த வீட்டைத் தாக்கினால் என்ன மாதிரியான விளைவை அது அக்கம் பக்கத்தில் பிரதிபலிக்கும் என்பது போன்ற முழு விவரங்களையும் இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் சேகரித்து அதற்கேற்ப தாக்குதலை ராணுவத்தால் திட்டமிட முடியும். இதுபோல தெளிவாக திட்டமிட்டுத் தாக்கும்போது இலக்கு சரியாக தாக்கப்படும்.. முடிவும் சரியாக கிடைக்கும்.




அதை விட முக்கியமாக இஸ்ரேலின் ஹப்ஸோரா திட்டத்தின் கீழ், என்ன மாதிரியான ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்பது வரை துல்லியமாக திட்டமிட முடியுமாம். இந்த ஆயுதத் தேர்வையும் சுயமாக அந்த சிஸ்டமே முடிவு செய்கிறது என்பதுதான் விசேஷமானது. அதாவது தகவல்களை மட்டும் சேகரித்து விட்டால் போதும்.. அந்த ஏஐ தொழில்நுட்பத் திட்டமே, மற்ற வேலைகளை தீர்மானித்து விடுகிறது. 


இஸ்ரேலின் இந்த புதிய அணுகுமுறையை சுருங்கச் சொல்ல வேண்டுமானால்.. காஸாவின் இந்தத் தெருவில் உள்ள இந்த வீட்டைத் தாக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்து விட்டால் போதும்..  அந்தத் தாக்குதலுக்குத் தேவையான அத்தனை விவரங்களையும் சேகரிப்பதோடு, எப்போது தாக்கலாம், எந்த ஆயுதத்தால் தாக்கலாம்.. என்ன மாதிரியான பின்விளைவு வரும் என்பது வரை அத்தனையையும் டீட்டெய்லாக கொடுத்து விடும் ஹப்ஸோரா. அதன் பிறகு நாம் தாக்குதலை நடத்த வேண்டியது மட்டும்தான் பாக்கி.


எதிர்காலத்தில்.. சான்ட்விச் சாப்பிட்டுக் கொண்டே இனி ஜாலியாக சண்டை போடப் போகிறது வல்லரசு ராணுவங்கள்.. அதன் முதல் படிதான் இஸ்ரேலின் "ஹப்ஸோரா"!


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்