டைரி எனும் அழகிய நாட் குறிப்பு.. அது ஒரு அழகிய நினைவு.. உங்களுக்கு அந்தப் பழக்கம் இருக்கா?

Mar 27, 2024,11:46 AM IST

டைரி.. இது ஒரு அழகிய நாட் குறிப்பு.. நினைவுகளின் தொகுப்பு.. நிகழ்கால நிகழ்வுகளின் தொகுப்பாக இருந்தாலும், வருங்கால வரலாறு.. 


இன்று எத்தனை  பேருக்கு எழுதும் பழக்கம் இருக்கிறது என்று  தெரியவில்லை. தற்காலத்தில் நம்மிடம் எது இருக்கிறதோ இல்லையோ, மன அழுத்தமும், மனப் புழுக்கமும் நிறையவே இருக்கிறது. இதில் சிக்கி மீள முடியாத பலர் வீபரித முடிவுகளை எடுக்கின்றனர்.. விரக்தியில் தள்ளப்படுகின்றனர்.. ஆனால்  டைரி எழுதும் பழக்கம் இந்த குழப்பத்திலிருந்து நம்மை விடுவிக்க நிறையவே உதவும்.


அன்றாடம் நாம் சந்திக்கும் அனுபவங்கள், சந்திக்கும் நிகழ்வுகள், நமது உணர்வுகள் என எல்லாவற்றையும் டைரியில் எழுதி வைப்பார்கள்.  நாம் எதிர் கொண்ட அந்த சூழ்நிலைகளை எழுதுவோம். துன்ப காலத்தில் யாரிடம் பகிர முடியாத விஷயங்கள் கூட டைரியில் நாம் எழுதுவோம். இது பலருக்கு ஆறுதலாக இருக்கும். இன்னும் சில வீடுகளில் பட்டெஜ்ட் எனும் வரவு, செலவுகளை எழுதி வைப்பர். இதில் குடும்ப வரவு, செலவு எனும்  பொருளாதார சூழ்நிலைகளை அனைவரும் அறிந்து கொள்ள உதவும். நாம் செய்த செலவுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, நடைமுறை வாழ்க்கையில் வீண் செலவுகளை குறைத்துக் கொள்ள உதவி செய்கிறது. 




நம்மிடையே, இன்று புத்தகங்கள் வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டு வருகிறது. அன்றைய நாட்களில் ரயில்  பயணங்களின் போதும், பஸ் பயணங்களின்போதும் புத்தகங்கள் வாசிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருப்போம்.  அது நினைவாற்றலையும் சிந்திக்கும் திறனையும் அதிகரிக்க உதவியது. ஆனால் இன்று பலரும்  பயணங்களின்போது செல்போனைத்தான் நோண்டிக் கொண்டு செல்கின்றனர். அதேபோலத்தான் இப்போது டைரி எழுதும் பழக்கமும் சுருங்கிப் போய் விட்டது.


அந்தக் காலத்து கல்வெட்டுகளின் பிற்கால வடிவம்தான் இந்த டைரி வடிவமாக இருக்க முடியும். பண்டைய மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகளை அறிந்து  கொள்ள நமக்கு கல்வெட்டுகள்தான் உதவி செய்கின்றன. அதேபோலத்தான் டைரியில் நாம் எழுதும் நிகழ்வுகளானது ஓரு கட்டத்தில் நாமே படிக்கும்  போது எவ்வளவு விஷயங்கள் நடந்துள்ளன, எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை அறிய உதவுகிறது. 


புதுச்சேரியில் மொழிபெயர்ப்பாளராக இருந்து வந்த அனந்தரங்கம் பிள்ளை எழுதி வைத்த டைரிக் குறிப்புகள் இன்று வரை பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருப்பதை நாம் மறந்து விட முடியாது. மகாத்மா காந்தியடிகள் எழுதிய சத்தியசோதனை, ஏ. பி. ஜே. அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகளும் இதில் அடங்கும். இன்று நூலகங்கள் நிறைய உள்ளன. ஆனால்  புத்தக வாசிப்பு மக்களிடையே மிகவும் குறைவு. 

டைரியும் சரி, புத்தக வாசிப்பும் சரி இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சமுக வலைதளங்கள் நம்மை  இக்காலத்தில் நமது  நேரத்தை ஆட்கொள்கிறன. டைரி எழுதுவது தொடர்ந்து இல்லா விட்டாலும் இடை இடையே மனதை பாதித்த சம்பவங்கள், இனிமையான நிகழ்வுகள், பயணங்களை எழுதி வையுங்கள்.. பின்னர் அதை எடுத்துப் படித்துப் பாருங்கள். படிக்கும் பொழுது இனம் புரியாத உணர்வு ஏற்படும். டைரி என்றாலே காதல் குறிப்புதான் என்று இல்லை,, கவிதைகள்தான் என்று இல்லை.. எத்தனையோ விஷயங்களை எழுதி வைக்கலாம்.. சந்தோஷமான சுவாசமாக அது உங்களை ஆற்றுப்படுத்தும்.


என்ன டைரியை எடுத்துட்டீங்களா.. ரைட்டு எழுத ஆரம்பிங்க அப்படியே.


கட்டுரை: சுஜித்ரா

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்